தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்
தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-181-7.html
சிறந்த தமிழ்ச் சிறுகதைகளைக் கொண்ட நூல் ஒன்றை எழுத்தாளர் தமிழ்மகன் உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு சிறுகதை வீதம் 13 சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. மகாகவி பாரதியார், வ.வே.சு. அய்யர், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாத உள்பட 13 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. தேர்வு செய்யப்பட்டவை சிறந்த கதைகள்தான். ஆயினும், பத்தாண்டுக்கு ஒரு கதை என்று ஒரு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டதால், கல்கி, மவுனி, கு.ப.ரா, அகிலன், லா.ச.ரா., போன்றோரின் கதைகள் இடம்பெறவில்லை. சிறந்த கதைகளைத் தேர்வு செய்ய தகுதி படைத்த தமிழ்மகன் குறைந்தது 25 கதைகள் கொண்ட பெருநூலைத் தயாரித்தால் எல்லோரையும் திருப்தி அடையச் செய்யலாம்.
—-
கண்ணே கனியமுதே, கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 60ரூ.
ஒரு குடும்ப கதையை அழகாக ஆரம்பித்து அற்புதமாக கொண்டு சென்று எதிர்பாராத சோகத்துடன் முடித்துள்ளார் கதாசிரியர் ஸ்ரீரமா. கண்கள் கலங்கிவிட்டன கடைசி பக்கங்களை படித்தபோது. அண்ணாவின் சிந்தனை முத்துக்கள், ஆ.கோ.குலோத்துங்கன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 60ரூ. தமிழக முன்னாள் முதல்அமைச்சர் அறிஞர் அண்ணா பல்வேறு விழாக்களில் கலந்துகொண்டு பேசிய, சிந்தனையை தூண்டும் கருத்துக்களை உள்ளடக்கிய நூல் இது. அரசியலை கடந்து மாமனிதராக விளங்கும் அண்ணாவின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் மனித குலத்திற்கு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. நன்றி:தினத்தந்தி, 20/11/13