ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்
ஆலயங்களின் உட்பொருள் விளக்கம், இலஞ்சி ஏ. சொக்கலிங்கம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், முதல் பாகம் விலை 260ரூ., இரண்டாம் பாகம் விலை 240ரூ.
ஆலயங்களின் என்பது இந்து சமயத்தின் அஸ்திவாரமாகும். கோவில்களில் செய்யப்படும் அபிஷேகம், அர்க்கியம் போன்ற கிரிகைகளின் உண்மைத் தன்மை குறித்தும், தீப ஆராதனை, நைவேதனம் முதலியவற்றின் அவசியம் குறித்தும் இந்த நூலில் இலஞ்சி ஏ. சொக்கலிங்கம் எளிய முறையில் விளக்கியுள்ளார். கொடி மரத்தின் அறிகுறியும், விழாக்களின் காரணங்களும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.
—-
சைவமும் வைணவமும், டாக்டர் பச்சையப்பன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 60ரூ.
சைவம் சிறந்ததா? வைணவம் சிறந்ததா என்று, ஆதிகாலத்திலேயே இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் இருந்து வந்திருக்கிறது. இந்து மதத்தின் இந்த இரு பிரிவுகள் பற்றி நன்கு ஆராய்ந்து, இரு பிரிவுகளைச் சேர்ந்த சான்றோர்கள் பற்றியும் விவரிக்கிறார் நூலாசிரியர் டாக்டர் பச்சையப்பன். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.