ஆலிஸின் அற்புத உலகம்

ஆலிஸின் அற்புத உலகம், லூயி கரோல், தமிழில் எஸ். ராமகிருஷ்ணன், வம்சி, விலை 120ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-144-4.html தோட்டத்துக்குச் செல்லும் சிறுமி ஆலிஸ், ஒரு முயலைப் பின்தொடர்ந்து அதன் வளைக்குள் செல்கிறாள். அங்கே முயலுக்கு ஒரு வீடே இருக்கிறது. அங்கே ஒரு பாட்டிலில் இருக்கும் திரவத்தைக் குடித்தவுடன் சின்னஞ்சிறியவளாகச் சுருங்கிப் போகிறாள் ஆலிஸ். பிறகு ஒரு கேக்கைச் சாப்பிடும்போது பிரம்மாண்டமாக வளர்ந்துவிடுகிறாள். இப்படியே கதை முழுவதும் அவள் சிறியவளாவதும், பிறகு வளர்வதுமாக இருக்கிறாள். நிறைய கதவுகள் வருகின்றன. அவற்றைத் திறந்தால் தோட்டங்களும், புதிய இடங்களும் வருகின்றன. இப்படி அளவு மாறிக்கொண்டே இருப்பதால், ஒரு கட்டத்தில் துக்கம் தாங்க முடியாமல் அவள் அழ ஆரம்பிக்க, அதனால் உருவாகும் குளத்தில் அவளே மூழ்கப் போகிறாள். அவளுடன் தண்ணீரில் தத்தளிக்கின்றன சுண்டெலிகளும் பறவைகளும். ஒரு வழியாக அதிலிருந்து தப்பித்து, கடைசியில் ஒரு ராணியிடம் மாட்டிக்கொள்கிறாள் குட்டியூண்டாக இருக்கும் ஆலிஸ், அவளிடம் ராணி விசாரணை நடத்தும்போது கேக்கைச் சாப்பிட்டு ஆலிஸ் பெரியவளாக மாற, ராணி, ராஜா, சீட்டுக்கட்டுகளாக இருக்கும் படைவீரர்கள் எல்லோரும் சரிந்து போகிறார்கள். ‘ நன்றி: தி இந்து, 23/4/2014.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *