இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, ஆர்.சி. சம்பத், பக். 104, காளீஸ்வரி பதிப்பகம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர். சென்னை – 17. விலை ரூ. 40

எம்.எஸ். என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி இந்தியா முழுதும், வெள்ள நிவாரண நிதி, கல்வி, சமூக நிறுவனங்களின் வளர்ச்சி நிதி போன்ற சேவைக்காக கச்சேரி நடத்தி திரட்டித் தந்த நிதி ஏராளம். இப்படியொருவர் இந்திய இசையுலகில் வாழ்ந்தார் என்பதே உலகுக்கே பெருமை. அதுவும் தமிழகத்திற்கு சிறப்பு. அத்தகைய இசையரசியின் வாழ்க்கையைத்தான் நூலாசிரியர் எழுதியுள்ளார். மகாத்மாகாந்தி, இந்திராகாந்தி ஆகியோருடனான நட்பு, தமிழிசைக்கு அவர் ஆற்றிய தொண்டு, சினிமாவுலகுக்கு செய்த சேவை, இசைக் கலைஞர்களை ஆதரித்த பாங்கு, திருமண வாழ்க்கை என்று பலவற்றையும் நூலில் தொட்டுள்ளார், ஆர்.சி. சம்பத். இசைப் பிரியர்கள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினரும் படிக்கவேண்டிய நூல்.  

 

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, பக். 288, வெளியிடு: அந்திமழை, ஜி4, குருவைஷ்ணவி அபார்ட்மென்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை – 117. விலை ரூ. 180 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-6.html

யுவான் சுவாங்கை ஒரு யாத்ரீகராகத்தான் அடையாளப்படுத்தியிருக்கிறோம். அவரை ஒரு புனைகதையின் நாயகனாக ஆக்கிப் பார்த்திருக்கிறார் நூலாசிரியர் அசோகன். புத்த மார்க்கத்தைத் தேடி, சீனாவிலிருந்து மிகக் கடினமான பயணத்தை மேற்கொண்ட யுவான், இந்தியா வந்து சேர்வதும், வரும் வழிதோறும் பட்டபாடுகளும், புத்தமதக் கருத்துகளை நிலைநாட்ட அவர் ஈடுபட்ட விவாதங்களும், புதிய ஞானத்தை அவர் சேகரித்த அனுபவங்களும் புத்தரின் போதி நிழலில் வந்தமர்ந்து அவரது பிறவிப்பயனை அடைவதும் என்று ஒரு பெரிய பயணத்தின் கதையை புனைவாக வழங்கியிருக்கிறார். நூலில் இடப் பெயராய்வு, கால ஆய்வு, வரலாற்றாய்வு என்று நூலாசிரியர் வலம் வருகிறார், அதுவும் புனைகதைக்கான இலக்கணத்துடன்.   நன்றி: குமுதம் 19-12-12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *