இணையில்லா இந்திய அறிவியல்

இணையில்லா இந்திய அறிவியல், கணித மன்றம், சென்னை, விலை 120ரூ.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிவியல் சிந்தனைகள் தோன்றியதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கிரகங்களின் பெயர்களை, அவற்றின் அளவுக்கு ஏற்றவாறு பண்டைய இந்தியர்கள் அமைத்திருந்தனர். பிற்காலத்தில் கண்டறியப்பட்ட பல விஞ்ஞான தத்துவங்களை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிந்திருகிறார்கள். இந்த உண்மைகளை பழம்பெரும் நூல்களில் இருந்து அறிய முடிகிறது என்கிறார் கணிதப் பேராசிரியர் இரா. சிவராமன். புதிய கருத்துக்களைக் கூறும் சிறந்த ஆராய்ச்சி நூல். நன்றி: தினத்தந்தி, 24/9/2014.  

—-

 

குருவிவனம், எம். கமலசேகர், ஊஞ்சல் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.

வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திக்கும் கணினி புரட்சி, கல்யாணம், தராசு, நண்பர்கள் உட்பட பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதை தொகுப்பு நூலாகும். இந்தக் கவிதைகளின் இயல்பு தன்மை சராசரிகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 24/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *