குருவிவனம்

குருவிவனம், எம். கமலசேகர், ஊஞ்சல் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. இயந்திரத்தனமும் நகர மயமாக்களும் எப்படி மனிதனையும் மற்ற ஜீவராசிகளையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளன என்ற யதார்த்தத்தை பேசும் இவரது கவிதைகளுக்கு பாராட்டு நிச்சயம். பெண்கள் பற்றிய கவிதைகளில் அவரது சமூக பிரக்ஞை பலருக்கு உதாரணம். நன்றி: குங்குமம், 23/9/2016.

Read more

இணையில்லா இந்திய அறிவியல்

இணையில்லா இந்திய அறிவியல், கணித மன்றம், சென்னை, விலை 120ரூ. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிவியல் சிந்தனைகள் தோன்றியதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கிரகங்களின் பெயர்களை, அவற்றின் அளவுக்கு ஏற்றவாறு பண்டைய இந்தியர்கள் அமைத்திருந்தனர். பிற்காலத்தில் கண்டறியப்பட்ட பல விஞ்ஞான தத்துவங்களை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிந்திருகிறார்கள். இந்த உண்மைகளை பழம்பெரும் நூல்களில் இருந்து அறிய முடிகிறது என்கிறார் கணிதப் பேராசிரியர் இரா. சிவராமன். புதிய கருத்துக்களைக் கூறும் சிறந்த ஆராய்ச்சி நூல். நன்றி: தினத்தந்தி, 24/9/2014.   —- […]

Read more

ஊமைச் சங்கு

ஊமைச் சங்கு, கி. தனவேல் இ.ஆ.ப., குமரன் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-296-4.html பால்ய கனவுகள் கி. தனவேல், இ.ஆ.ப., தனது ஊமைச்சங்கு கவிதைத் தொகுப்பில் சமூக அக்கறையோடு, இன்னும் ஈரம் காயாத பால்ய கால நினைவுகளையும், தான் பார்க்கும், காட்சித் தோற்றங்கள் பலவற்றையும் ரசனையோடு சின்ன சின்ன வார்த்தைகளில் கவிதைகளுக்குள் அடக்க முயற்சித்திருக்கிறார். குரோட்டன்ஸ் பூப்பதில்லையே எனச் சொல்பவர்கள் அது இலைகளாய் பூத்திருப்பதைப் பார்க்கத் தவறியவர்கள். என்பது ஒரு சின்ன உதாரணம். மனிதர்கள் […]

Read more