ஊமைச் சங்கு
ஊமைச் சங்கு, கி. தனவேல் இ.ஆ.ப., குமரன் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-296-4.html பால்ய கனவுகள் கி. தனவேல், இ.ஆ.ப., தனது ஊமைச்சங்கு கவிதைத் தொகுப்பில் சமூக அக்கறையோடு, இன்னும் ஈரம் காயாத பால்ய கால நினைவுகளையும், தான் பார்க்கும், காட்சித் தோற்றங்கள் பலவற்றையும் ரசனையோடு சின்ன சின்ன வார்த்தைகளில் கவிதைகளுக்குள் அடக்க முயற்சித்திருக்கிறார். குரோட்டன்ஸ் பூப்பதில்லையே எனச் சொல்பவர்கள் அது இலைகளாய் பூத்திருப்பதைப் பார்க்கத் தவறியவர்கள். என்பது ஒரு சின்ன உதாரணம். மனிதர்கள் பலர் இயந்திரங்களாக மாறிப்போன நிலையில் இரக்கம், அக்கறை அழிந்து வரும் விவசாயம், தலைமுறை இடைவெளிகளின் பிணக்குகள், பால்ய கால மாயக் கம்பள நினைவுகளை இழந்து தவிப்பது என்பதையெல்லாம் கவிதைகளாக்கி இருக்கிறார். அடுத்த நிமிடம் அறுபடப் போவதை அறியாமல் அனாவசியமாய் அடுத்த கோழியுடன் சண்டையிடுகிறது கறிக்கடைக் கூண்டில் அடைப்பட்டிருக்கும் சேவல். என்பது ஒரு சுவாரசியமான கவிதை. நன்றி: அந்திமழை, 1/9/201.
—-
குருவி வனம், எம். கமலசேகர், ஊஞ்சல் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
வனம் மறந்த குருவிகள் கவிஞர் எம். கமலசேகரின் நான்காகவது கவிதைத் தொகுப்பு குருவி வனம். கவிஞர் சிருஷ்டியத்திருக்கும் இந்த வனத்தில் காதல், காமம், மனித மனதின் கபடம், உலகமயமாக்கத்தின் விளைவு, இழந்து போகும் கடந்த தலைமுறை கிராம வாழ்க்கை, அபகரிப்படும் நதிகளை, மரங்களை, ஆற்று மண்ணை நினைத்து ஊமைக் குரல் கொடுப்பது இப்படி எல்லா முகங்களையும் சின்ன சின்ன கவிதைகளுக்குள் முடிந்தவலை தடம் போட்டிருக்கிறார் எம். கமலசேகர். எட்டி நின்று முதிர் கன்னிகள் குறித்தும், குடிகார கணவர்களால் இம்சிக்கப்படும் பண்களைக் குறித்தும் சொல்லும் அவர், பாசாங்கு இல்லாமல் தன்னையே விமர்சித்து முள் நினைவு கவிதையில் பலாப் பழத்திற்கு நேர் எதிர் நான் முள்ளாய் உன் நினைவுகளை உள்ளே வைத்துக்கொண்டு இனிமையாய் வெளியே புன்னகைக்கிறேன் என்கிறார். நன்றி: அந்திமழை, 1/9/201.