இதயம் இதயமாய் இயங்க

இதயம் இதயமாய் இயங்க, வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், 21-10, லோகநாதன் நகர், 2ம் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 200ரூ.

இதயம் எப்படி நம் உடம்பில் செயல்படுகிறது என்பதை விரிவாக தெளிவாக விளக்குகிறது இந்த நூல். இதய அமைப்பு, இதய செயல் திறன், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், பராமரிப்பிற்கான வழிவகைகள், கருவுற்ற நிலையில் நச்சுத்தன்மை, மாரடைப்பு என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? மாரடைப்பிற்கு எளிதில் யார் இலக்காகிறார்கள்? முன்னெச்சரிக்கை அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்ன என்பனவற்றுக்கு படங்களுடன் மருத்துவ விளக்கமும், ஆலோசனைக் குறிப்பும் கொடுத்து வாசகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் மருத்துவர் வெ. குழந்தைவேலு.  

—-

 

பேசும் ஓவியம், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 80ரூ.

சிறுவர்களுக்குக் கதை எழுத தனித்திறமை வேண்டும். இதில் உள்ள கதைகளைப் படிக்கும்போது நூல் ஆசிரியை ஜி.மீனாட்சியின் ஆற்றல் நன்கு புலப்படுகிறது. ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி அல்லது பாடம் இருக்கிறது. பேசும் ஓவியம் கதை, எதிர்பாராத திருப்பத்துடன் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. படங்கள், புத்தகத்துக்கு அழகு சேர்க்கின்றன.  

—-

 

சுராவின் இயர்புக், சுரா காலேஜ் ஆப் காம்படிஷன், 1620, ஜே பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை 40, விலை 299ரூ.

2014ம் ஆண்டுக்கான இயர் புக்கை சுரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பொது பரீட்சைகள் எழுதுவோருக்கு பயன்படக்கூடிய சகல தகவல்களும் அடங்கியுள்ளன. 1232 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 22/1/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *