இந்திய நாட்டுப் பண்பாடு
இந்திய நாட்டுப் பண்பாடு, சௌரி, சேது அலமி பிரசுரம், பக். 176, விலை 110ரூ.
ராமாயண காலம் முதல் இந்தியாவில் நிலவிய பண்பாட்டை இந்த நூல் விவரிக்கிறது. வால்மீகி ராமாயணத்தின் துணை கொண்டு, பண்டைய சமூகப் பழக்க வழக்கங்கள், கோமாதா நம் குலமாதா என்று ஏன் வழிபடுகிறோம், பசு பராமரிப்பின் பயன், 84 சித்தர்கள், கி.பி. 800 முதல் கி.பி. 1200 வரையுள்ள, 400 ஆண்டுகளில் இந்திய மக்களிடையே சமத்துவ சமுதாய உணர்வைப் பரப்பினர் (பக். 113) ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தெய்வக்கலையாக நடனம் இருந்தது. அந்த கலை இந்தியாவின் பல பகுதிகளில் வளர்ந்து, புகழ் பெற்றது (பக். 115-144), சங்கீதக் கலைக்குத் தான்ஸேன் செய்துள்ள தொண்டுகள் (பக். 152), புரட்சிப் பெரியார் ராகுல்ஜியின் சிறப்புகளை விவரித்தும், காந்தி, காஞ்சி சங்கராச்சாரியார் ஆகிய இரு மகான்கள், 1927ல் சந்தித்துப் பேசிய நிகழ்வு (பக். 173) ஆகியவை குறித்து, இந்த நூல் பேசுகிறது. இனிய எளிய தமிழ்நடையில் நூல் அமைந்துள்ளது. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 17/1/2016.