இந்திய ரெயில்வே தொடக்க காலம்
இந்திய ரெயில்வே தொடக்க காலம், எஸ். வெங்கட்ராமன், சென்னை, விலை 800ரூ.
இந்திய ரெயில்வேயில் நீண்ட காலம் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எஸ். வெங்கட்ராமன் (தற்போது வயது 92). அவர் இந்தியாவில் ரெயில் போக்குவரத்து எப்போது தொடங்கியது, அதற்குக் காரணமாக இருந்தவர் யார், ஆரம்ப கால ரெயில் எப்படி இருந்தது என்பதை எல்லாம் ஆராய்ந்து, இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். 500 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம், முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. சுமார் 600 படங்கள் இடம் பெற்றுள்ள. புத்தகத்தின் தொடக்கத்தில் பிரதமர் மோடி பற்றிய கட்டுரைகளும், படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பயனுள்ள தகவல்களும், அபூர்வமான படங்களும் கொண்ட இந்த புத்தகம் ஒவ்வொரு நூல் நிலையத்திலும் இடம் பெற்றால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள். நன்றி: தினத்தந்தி, 20/5/2015.
—-
புறநானூறு, சொர்ணவள்ளி பிரசுரம், சென்னை, விலை 190ரூ.
சங்கத் தமிழ் நூலாகிய புறநானூறு, தமிழர்களின் வீரத்தையும், ஈரத்தையும் பறை சாற்றும் அரிய பொக்கிஷம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, வீரம் செறிந்த போர்கள், போர்நெறி ஆகியவற்றை புறநானூற்று பாடல்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். இந்த பாடல்களுக்கு புலியூர் கேசிகன் எளிய நடையில் தெளிவுரை எழுதியுள்ளார். பின்னிணைப்பாக பாடியோர் வரலாறு, புறநானூற்றின் திணை மற்றும் துறைகள், செய்யுளின் முதற்குறிப்பு இணைக்கப்பட்டிருப்பது நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினத்தந்தி, 20/5/2015.