இந்திய விடுதலைப் போரில் சென்னை

இந்திய விடுதலைப் போரில் சென்னை, வி.சீ.கமலக்கண்ணன், விழிகள் பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 200ரூ.

சென்னை நகரில் நடந்த விடுதலைப் போர் நிகழ்வுகளே நூலின் மையப் பொருளாக இருந்தாலும், சென்னை மாநகர உருவாக்கம், சென்னையில் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி, தேசிய இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி என நிறைய விஷயங்களை இந்நூல் பேசுகிறது. விடுதலைப் போராட்டத்தின் வீச்சு சென்னையில் வாழ்ந்த எல்லாத் தரப்பு மக்களையும் எந்த அளவுக்கு ஈர்த்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மாணவர்கள் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் வந்தேமாதரம் என்று கூறம் மாணவர்களைப் பல்கலைக்கழகத் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என 1907 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 1921இல் சென்னை மவுண்ட் சாலையில் இருந்த வில்லிங்டன் திரையரங்கத்தின் கட்டிடத்தில் பிரிட்டிஷ் அரசின் கொடி பறந்ததால் போராட்டக்காரர்கள் திரையரங்கின் மீது கல் எறிய, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. 1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவல்லிக்கேணிப் பகுதியில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்பட்ட ஐந்து சிறுவர்கள் காவல்துறையால் பிடிக்கப்பட்டு பெற்றோர் முன்னிலையில் சவுக்கால் அடிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டிஷாரிடம் இருந்து நாடு விடுதலை பெற சாதாரண மக்கள் எவ்வளவு தீரமுடன் போராடினார்கள் என்பதற்கான ஆவணமாகத் திகழும் நூல். நன்றி: தினமணி, 9/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *