இந்திய விடுதலைப் போரில் சென்னை

இந்திய விடுதலைப் போரில் சென்னை, வி.சீ.கமலக்கண்ணன், விழிகள் பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 200ரூ. சென்னை நகரில் நடந்த விடுதலைப் போர் நிகழ்வுகளே நூலின் மையப் பொருளாக இருந்தாலும், சென்னை மாநகர உருவாக்கம், சென்னையில் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி, தேசிய இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி என நிறைய விஷயங்களை இந்நூல் பேசுகிறது. விடுதலைப் போராட்டத்தின் வீச்சு சென்னையில் வாழ்ந்த எல்லாத் தரப்பு மக்களையும் எந்த அளவுக்கு ஈர்த்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மாணவர்கள் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் வந்தேமாதரம் என்று […]

Read more

நான் நடிகன் ஆன கதை

நான் நடிகன் ஆன கதை, சார்லி சாப்ளின், தமிழில் சுரா, வ.உ.சி. பதிப்பகம். மிக சாதாரண சூழ்நிலையில் பிறந்த ஒரு மனிதன் நினைத்தால் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் முன்னுக்கு வரமுடியும் என்பதற்கு சார்லி சாப்ளின் வாழ்க்கை ஒரு உதாரணம். படம் மூலம் அவர் பலரை சிரிக்க வைத்தாலும், அவர் வாழ்க்கையில் மிக பெரிய சோகம் இருந்துள்ளது. ஒவ்வொரு நாளும், பசி, பட்டினியோடு வாழ்ந்த சார்லி சாப்ளின், அதை எப்படி எதிர்கொண்டு உலகம் போற்றக்கூடிய கலைமேதையாக ஆனார் என்பதை அவரே விவரிக்கும் புத்தகம் இது. […]

Read more