காமராஜ்
காமராஜ், டி.எஸ். சொக்கலிங்கம், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 152, விலை 110ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-366-2.html காமராஜ் டி.எஸ். சொக்கலிங்கம் இருவருமே இருதுறை ஆளுமைகள். இருவரும் நெருங்கிப் பழகியவர்கள். இருப்பினும்கூட, புத்தகத்தின் ஒரேயொரு இடத்தில், “நானும் சென்றிருந்தேன்” என்று கூறுவதைத் தவிர, வேறு எந்த இடத்திலும் தன்னைப் பற்றிப் பேசாததே டி.எஸ்.சொக்கலிங்கத்தின் பெருமை. தமிழ்நாட்டில் ஏன் நீதிக்கட்சி உருவானது என்பதையும், அரசியலில் பிராமணர் அல்லாதார் தலைமேயேற்கும் நிலையையும் முதல் அத்தியாயத்தில் விவரித்து, அதன் பிறகு காமராஜர் வரலாற்றை விவரிக்கும் பாங்கு, அன்றைய அரசியல் கொந்தளிப்பே காமராஜரின் வெற்றிக்கு அடித்தளம் என்பதைக் காட்டுகிறது. காமராஜர் – ராஜாஜி இடையே கடைசி வரை நிலவிய பூசலுக்கான காரணங்களையும் சொல்லாமல் சொல்கிறது. காமராஜரின் அனைத்து ஆளுமைப் பண்புகளையும், அதன் அழுத்தங்களையும்இந்தப் புத்தகத்தில் காணலாம். அவர் முதல்வர் பதவிக்கு வந்ததோடு புத்தகம் முடிகிறது. காமராஜ் ஆட்சியில் சாதித்ததை தனியாக எழுதத் திட்டமிட்டிருப்பாரோ! எனினும் இந்தப் புத்தகத்தின் கடைசி அட்டையில் காமராஜ் பற்றிய பெரியாரின் மேற்கோளும், முதல் பக்கத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மேற்கோளும் காமராஜரின் ஆளுமை உயரத்துக்குச் சான்றுகள். 1955இல் வெளியான புத்தகம். இதன் எழுத்து நடை சற்ற வித்தியாசமாகத் தோன்றும். அதே காலகட்டத்தில் வெளியான மற்ற சஞ்சிகைகளின் எழுத்து நடையைப் படித்தவர்களுக்குத்தான் சொக்கலிங்கத்தின் தமிழ் எத்தனை சுவையானது என்பது புரியும். டி.எஸ்.சொக்கலிங்கம் பற்றி விக்ரமன் கட்டுரையும், கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது எனும் அண்ணாதுரையின் கட்டுரையும் நமக்குக் கூடுதல் போனஸ்! நன்றி: தினமணி, 9/3/2015.