இந்து மத சம்பிரதாயங்கள் ஏன்? எதற்காக?
இந்து மத சம்பிரதாயங்கள் ஏன்? எதற்காக?, யோகி ஸ்ரீ ராமானந்த குரு, அழகு பதிப்பகம், சென்னை, விலை 260ரூ.
இந்து மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் கோட்பாடுகள் இறைவனை வழிபடும் முறை என்பது உள்பட அனைத்து தகவல்களையும் கொண்ட நூல். நன்றி: தினத்தந்தி, 27/5/2015.
—-
செயல்திறன் மிக்க 5 எஸ்கள், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூர், விலை 35ரூ.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றி அமைத்தன. இதற்கு உதவும் வகையில் ஒரு தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள். பொருட்களை வகைப்படுத்துதல், ஒழுங்கமைத்தல், தூய்மைப்படுத்துதல், நிலைப்படுத்துதல், ஒழுக்கத்தை பராமரித்தல் ஆகிய 5 எஸ் என்ற செயல்திறன் மிக்க வழிமுறையைச் செயல்படுத்தினார்கள். அதில் வெற்றியும் பெற்றனர். அது குறித்து இந்த நூலில் ஜெ. வீரநாதன் விரிவாக அலசுகிறார். நன்றி: தினத்தந்தி, 13/5/2015