இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும்

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும், சேவியர், தோழமை வெளியீடு, சென்னை, பக். 184, விலை 150ரூ.

மறைந்த திரைப்பட இயக்குநர் கே. பாலச்சந்தர் பிறந்ததிலிருந்து கல்வி கற்றது, நாடக உலகில் புகுந்தது, திரையுலகில் சாதித்தது என அவரது வரலாறு சுவையோடு சொல்லப்பட்டிருக்கிறது. பாலசந்தர் எடுத்த குறிபிடத்தக்க திருப்புமுனைத் திரைப்படங்கள், அவர் அறிமுகப்படுத்தி உயரத்துக்குச் சென்ற கமல்ஹாசன், ரஜினிகாந்த், நாசர், சரத்பாபு, சரிதா, விவேக் போன்ற நட்சத்திரங்கள், அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி சாதனைகள் புரிந்த வசந்த், சுரேஷ் கிருஷ்ணா, ஹரி, செல்வராகவன் ஆகியோரைப் பற்றிய செய்திகள் என பாலசந்தர் சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல்களும் நம்மை ஈர்க்கின்றன. பாலசந்தர் அளித்த நேர்காணல்களும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. “கெட்டதை என் படங்கள் மூலமாக புகுத்திவிடக் கூடாது என்ற CONVICTION உடன் இருக்கிறேன். அந்த CONVICTIONதான் சமகாலப் பிரச்னைகளையும் என் படங்களில் வைப்பதற்கான ஊக்கத்தையும் ஆர்வத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது” என்று சொன்னதைப் போல அவர் தன் வாழ்வில் நடந்து காட்டியிருப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. கே. பாலசந்தரைப் பற்றிய ஓர் அருமையான ஆவணம் இந்நூல். நன்றி: தினமணி, 30/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *