காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள்
காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள், ஜீவா பதிப்பகம், பக். 176, விலை 90ரூ.
தமிழில் கடித இலக்கியம் என்னும் துறை வளர பலர் பலவழிகளில் உதவியுள்ளனர். அவர்களில் வெ. சாமிநாத சர்மாவின் பங்கு அதிகம். மகாத்மா காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தை அன்றைய ஜோதி இதழில் அவர் முழுமையாக நேர்மையாக மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அந்த கடிதப் போக்குவரத்தின் தொகுப்பே இந்நூல். கடிதங்கள் ஒவ்வொன்றும், காலம், நேரம், இடம், அரசியல் சூழல், சமூக தேவை, காங்கிரஸின் அன்றைய நிலை, இந்திய தேசிய சுதந்திரப் போராட்டத்தின்போக்கு, பட்டேல் உட்பட தேசியத் தலைவர்களின் எண்ணம், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஊழல், காங்கிரஸில் நேதாஜிக்கு இருந்த ஆதரவு, காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நேதாஜி தேர்வு செய்யப்பட்ட தருணம், அதற்குக் காந்தி கட்டுப்படாமல் போனது, நேதாஜியின் இந்திய தேசிய இராணும் பிரிட்டிஷ் கட்சிக்கு எதிராக நடத்திய போராட்டம் போன்ற செய்திகளை இந்தக் கடிதப் போக்குவரத்தின் மூலம் நமக்கு அறியப்படுத்துகிறார் தொகுப்பாளர் கே. ஜீவபாரதி. இந்திய விடுதலை வரலாற்றில் மறைப்பும், திரிபு வாதமும் ஏற்பட்டதை களைந்து வெளிச்சத்திற்கு உண்மைகளைக் கொண்டு வர முயலும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 23/2/2015.