வெற்றிப் படிக்கட்டு (பாகம்1, 2)

வெற்றிப் படிக்கட்டு (பாகம்1, 2), ஹெச். வசந்தகுமார், வெற்றி பவுண்டேஷன் மற்றும் வசந்த் அண்ட் கோ, சென்னை, பக். 194, விலை 150ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-1.html வசந்த் டிவி ஆசிரியர் வழங்கி வந்த, சுயமுன்னேற்றம் தொடர்பான சொற்பொழிவுகள், இரண்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. முதல் பாகத்தில், 50 கட்டுரைகள் இடம்பெற்றன. இரண்டாம் பாகத்தில் 76 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சின்ன கோடு-பெரியகோடு தத்துவத்தைக் கூறி அதற்கு, வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால், அவன் மற்றவரை மறைக்காமல், அழிக்காமல் தன் நிலையை உயர்த்திக்கொள்ளும் சுய முன்னற்றத்தில் கவனம் செலுத்தி, மற்றவரை விட தன் நிலையை உயர்த்திக் காட்டுவதுதான் சிறப்பான சாதனை என்கிறார் (பக். 54). தமிழக அரசின் கஜானா காலியாக இருந்த போது, மதுவிலக்கை அமல்படுத்தியதால்தான் பணச்சிக்கல் என பலர் கூறினர். ஆனால் அப்போதைய முதல்வர் ராஜாஜி ஒரு போதும் மதுவிலக்கை தளர்த்த ஒப்புக்கொள்ளவில்லை. நிதி நிர்வாகத்தை சீர் செய்ய, விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். இந்தியாவிலேயே விற்பனை வரியை அமல்படுத்திய மாநிலம் தமிழகம்தான். ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெற்றுள்ள, கருத்தை விட்டு விலகாமல், நேர்த்தியாக ஓவியங்கள் வரைந்திருக்கிறார் ஓவியர் ஸ்யாம். – சி.கலாதம்பி. நன்றி: தினமலர், 22.3.2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *