இரண்டு உரூபாய்
இரண்டு உரூபாய், புதுவை யுகபாரதி, நண்பர்கள் தோட்டம், 46, மாரியம்மன் கோவில் தெரு, சீவானந்தபுரம், புதுச்சேரி 605008, விலை 120ரூ.
பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த புதுச்சேரியின் விடுதலை வேட்கை சிந்தனைகளை முதன்மையாக கொண்டு, மனிதநேயம், குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட சிந்தனைகளை துணையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பில் கதைகள் ஒவ்வொன்றும் பேச்சத்தமிழில், அதேசமயம் இலக்கிய நயம் மாறாமல் எழுதப்பட்டுள்ளன.
—-
தமிழிசை ஆய்வு மாலை 2013, தி.சரேஷ்சிவன், திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக்கல்வி அறக்கட்டளை, மதுரை 625001, விலை 100ரூ.
சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பண் வகைகள், அவற்றின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துள்ளதோடு, அவற்றை எழுதிய புலவர்கள் பண்களை தொகுத்துள்ள நேர்த்தி உள்ளிட்ட பலவற்றையும் இந்நூல் விளக்கியுள்ளது. ஆய்வு மாணவர்கள் உள்பட தமிழ் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல் இது. நன்றி: தினத்தந்தி, 21/8/2013.
—-
ஆவதும் பெண்களாலே அழிவதும், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2, விலை 28ரூ.
பொதுவாக ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று கூறுவார்கள். அது தவறு என்று கூறுகிறார் வாரியார் சுவாமிகள். குடும்பம் ஆவதும் பெண்களாலே, கணவனுக்கு வரும் கஷ்டங்கள் அழிவதும் பெண்களாலே என்று சொல்கிறார். தன் கருத்தை வலியுறுத்தி அரிச்சந்திரன் மனைவி சந்திரமதி, சத்தியவான் மனைவி சாவித்திரி ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கிறார். இதுபோல் ஆன்மிக கட்டுரைகள் பலவற்றை தனக்கே உரித்தான பாணியில் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் கிருபானந்த வாரியார். சிறிய புத்தகத்தில் நிறைந்த கருத்துக்கள். நன்றி: தினத்தந்தி, 12/9/2012.