இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன், ம. ராஜசேகர தங்கமணி, எம்.ஏ., பி.டி., விகடன் பிரசுரம், சென்னை, பக். 416, விலை160ரூ.

To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-196-4.html கங்கை கொண்ட சோழன் என்று புகழப்படும் சோழ மாமன்னனின் வீர வரலாறு. ராஜராஜ சோழனின் புகழுக்கும், புத்தி கூர்மைக்கும் தஞ்சைப் பெரிய கோவிலே சாட்சி என்றால், அவனுடைய மைந்தன் ராஜேந்திர சோழனின் கீர்த்திக்கு கங்கை கொண்ட சோழபுரம் கோவில், ஒரு மகத்தான அடையாளம் எனலாம். தமிழ் நிலம் முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, ஈழம் கடாரம், வடபுலம் என, தன் வெற்றிக் கொடியை பறக்க செய்த வீர வித்தகன் ராஜேந்திர சோழன். பேராசிரியர் ம. ராஜசேகர தங்கமணி, வியத்தகு அரிய செய்திகளுடன் இவ்வரலாற்று நூலை உருவாக்கியுள்ளார். ஆய்வில் தெளிவு, கூரிய நோக்குடன் சுவைபட வரலாற்றை விவரிப்பது என்பவற்றால் நூல் நெடுக நம்மை ஈர்க்கிறது. ராஜேந்திரனும் முகமது கஜினி படையெடுப்பும், பல புதிய செய்திகளை நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறது. வரலாற்று ஆர்வலர்களுக்கு இந்நூல் போற்றத்தக்க பொக்கிஷம் எனலாம். -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 1/6/2014.  

—-

சித்தர் தத்துவத்தில் ஜோதிடம், புலவர் நவமணி சண்முகவேலு, வள்ளலார் புத்தக நிலையம்.

சித்தர் திருமூலரின் இரு நூலில் உள்ள ஜோதிடம், வாஸ்து குறிப்புகள், இந்நூலில் தொகுத்து விளக்கப்பட்டு உள்ளன. தன்னை அர்ச்சிக்கத் தானிருந்தோனே என்ற திருமூலரின் பாடல் வரிக்கு, புது விளக்கம் தரப்பட்டு உள்ளது. திருமூலர் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு, இதுவரை வெளிவராத யந்திரம் இந்நூலின் சிறப்பு. இது ஓர் அரிய முயற்சி. சில தசைகளின் பலன்களும், இதில் சிறப்பாக தரப்பட்டுள்ளன. -மயிலை சிவா. நன்றி: தினமலர், 1/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *