இலக்கியத் திறனாய்வும்
இலக்கியத் திறனாய்வும், படைப்பிலக்கியமும், முனைவர் ந. வெங்கடேசன், குகன் பதிப்பகம், 5, வி.கே.கே. பில்டிங், வடுவூர் 614019, பக். 208, விலை 150ரூ.
படைப்பாளிக்கும், திறனாய்வாளனுக்கும் இடையே, ஒரு தொடர்பை ஏற்படுத்துவது படைப்புதான். நூலைப் படைத்தவனைக் காட்டிலும், திறனாய்வாளன் புகழ்பெறும் அளவிற்கு, திறனாய்வு உலகம் வளர்ச்சி பெற்றுள்ளது. இலக்கியம் உணர்வினை வெளிப்படுத்தினால், அதில் அறிவினை செலுத்துவது திறனாய்வு. அறிவுக்கண் கொண்டு இலக்கியத்தை பார்த்து அதன் ஆழ, அகலப் பரிமாணங்களை நுணுக்கமாக வெளிப்படுத்தும் கலைதான் திறனாய்வுகலை. அந்த திறனாய்வு கலை நுட்பங்களை, இந்த நூல் அழகாக வெளிப்படுத்துகிறது. தமிழில் படைப்பிலக்கியங்களாக கருதப்படும் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் முதலானவற்றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விளக்கியுள்ளார் முனைவர் ந. வெங்கடேசன். சிறுகதை எழுதுவது எப்படி? எனக் கற்றுக் கொடுக்கும் நோக்கில், உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல் பாட நூலாகும் தகுதி கொண்டது. நன்றி: தினமலர், 14/7/13.
—-
கருத்து வேறுபாடுகள் அருளா? அழிவா?, மௌலவி நூஹ் மஹ்ழரி, இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 12, பக். 168, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-416-0.html
இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிக் கொண்டிருக்கின்ற விஷயம் மார்க்க விஷயத்தில் நீ சொல்வது சரியா, நான் சொல்வது சரியா என்பவை. இவ்வாறு தங்களுக்குள் முரண்பாடு இருக்கையில் வராது வந்த மாமணிபோல நம் கையில் கிடைத்த அரிய பொக்கிஷம் இந்த நூல். கருத்து வேறுபாடுகள் இப்பரந்த அறிவுசார் இஸ்லாமிய மார்க்கத்தில் தவிர்க்க முடியாதது என்றும், அதை நாம் எவ்வாறு கையாளுகின்றோம் என்பதில்தான் இருக்கிறது என்றும் அழகிய உதாரணங்களுடன் நூலாசிரியர் தெளிவுபடுத்தியிருக்கிறார். குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் தங்களையே அழித்து கொள்ள பயன்படுத்தும் நபி மொழியான 73 கூட்டங்கள் சம்பந்தமான நபிமொழி குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் கையில் இருக்க வேண்டிய தவிர்க்க முடியாத நூல். நன்றி; தினத்தந்தி, 22/7/13.