இலக்கிய உதயம்

இலக்கிய உதயம், பேராசிரியர். எஸ். வையாபுரிப் பிள்ளை, பூம்புகார் பதிப்பகம், பக். 464, விலை 250ரூ.

இலக்கிய ஆராய்ச்சி ஆர்வலர்களுக்குக் கிடைத்த அறிவுக் களஞ்சியப் பேழையாக அமைந்துள்ள இந்நூல், எல்லாருக்கும் பயன்தரும் நல்ல நூல். எகிப்து, பாபிலோனியா, பாலஸ்தீனம், பாரசீகம், சீனம் ஆகிய பிற நாட்டு ஆதி இலக்கியங்களையும், நம் நாட்டு இலக்கியங்களையும் அறிந்து கொள்ள பெருந்துணையாய் அமைந்துள்ளது. வேதங்கள், புராணங்கள், பவுத்த இலக்கியங்கள் முதல் அனைத்தையும் இந்நூல் மூலம் அறிந்து கொள்ள இயல்கின்றது. இலக்கியங்களில் ஒப்பியல் ஒருமைப்பாட்டைக் காண்கிறார் நூலாசிரியர். மகாபாரதக் கதையை முழுமையாக, சுருக்கமாக, அழகுடன் இயம்பியுள்ளார். அதில், யட்சன் கேட்கும் வினாக்களுக்கு, யுதிஷ்டிரர்(தருமர்) கூறும் விடைகள் சிந்தனையைத் தூண்டுவன. நூலின் இறுதியில் பேராசிரியர் வையாபுரியானின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பும், பொருட்குறிப்பு அகராதியும் கொடுக்கப்பட்டுள்ளன. இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் சிறந்த நூல். -பேரா. ம.நா. சந்தான கிருஷ்ணன். நன்றி; தினமலர், 23/6/2013.  

—-

 

வரும் போலிருக்கிறது மழை, மு. முருகேஷ், அகநி, எண்.3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, 604408, விலை 40ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-4.html

ஒவ்வொன்றும் மூன்றே வரிகளில் மனதைத்தொடும் ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு. யுத்தம் முடிந்தது-வீடு திரும்பின-சடலங்கள் என்பது போன்ற 100க்கும் அதிகமான ஹைக்கூ கவிதைகளுடன் 2008 உலக ஹைக்கூ கவிதைப் போட்டியில் தேர்வான கவிதைகளும் பரவசப்படுத்துகின்றன. நன்றி: தினத்தந்தி, 26/6/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *