ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், ஃப்ரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பதிப்பகம், விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html

சாட்சியங்களற்ற போர் என வர்ணிக்கப்பட்ட ஈழ இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை இந்த நூல் முதல் தடவையாக வெளியே கொண்டு வருகிறது. சர்வதேச சமூகமூம், ஐக்கிய நாடுகள் அவையும் எவ்வளவு கவனம் எடுத்து மறைக்க முயன்றாலும் மறுபடியும் மறுபடியும் கொலைக்கள ஆவணங்களும், சாட்சியங்களும், வாக்குமூலங்களும் இன்று பரவலாகக் கிடைக்கின்றன. பிபிசியின் செய்தியாளராக இலங்கையில் பணிபுரிந்த ஃபிரான்ஸிஸ் ஹாரிசனின் இந்த நூல் சான்றுகளையும் தகவல்களையும் உயிர் தப்பிப் பிழைத்தோரின் அவல அனுபவங்களையும் புரிந்துணர்வுடனும் உணர்வுத் தோழமையுடனும் ஒருசேரத் தருகிறது. ஸ்டில் கௌண்டிங் தி டெத் எனும் ஆங்கில நூலை இணக்கமான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்.கே.மகாலிங்கம். -சேரன்

—–

அணுசக்தி அரசியல், எம்.பி. பரமேசுவரன், தமிழில் தே.மனோ, விலை 95ரூ.

அணு விஞ்ஞானியும், அணுசக்தியின் முக்கிய விமர்சகருமான திரு. எம்.பி. பரமேசுவரனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இருண்ட விடியல் (2008) என்ற நூல், எதிர்கால பேரிடருக்கான வாயில் என்ற (ஆங்கில) கட்டுரை, மாத்ரு பூமி மலையாள நாளிதழில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக பிரகாஷ் காராட்டுக்கு மறுப்பாக எழுதிய கட்டுரை ஆகியவற்றின் தொகுப்பு இந்நுல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *