அறிவியல் நோக்கில் அந்தரங்கம் (கேள்வி – பதில்கள்)
அறிவியல் நோக்கில் அந்தரங்கம் (கேள்வி – பதில்கள்), அறந்தாங்கி சுப. சதாசிவம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி சிட்கோ இண்டஸ்ரீயல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக்கங்கள் 120, விலை 60ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-2.html
தாம்பத்ய உறவில் இனிமை கூடவும், முழு திருப்தி ஏற்படவும், இது குறித்து எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் இந்த நூலில் நிறைய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. பாலியல் உறவு என்பது ஒரு புதிர் என எண்ணுவோருக்கு பல விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பலருடைய சந்தேகங்கள் தீர்க்கப்பட்டுள்ளன. எல்லாமே கேள்வி பதில் பாணியில் இருப்பதால் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. சுப. சதாசிவம் மருத்துவத் துறையிலும் எழுத்துத் துறையிலும் நீண்டநாள் அனுபவம் உடையவர். இது ஒரு அறிவியல் அணுகுமுறை நூல். எனவே ஆபாசம் என ஒதுக்கித் தள்ளாதவகையில் பாலியல் உறவு பற்றிய புத்தகம் இது என்று கூறலாம். – வி. பாலு.
—–
அறிவுலக மேதை டாக்டர். ராம் மனோகர் லோகியா ஓர் அறிமுகம், நாராண நடேசன், 1, சேனைத்தலைவர் தெரு, ஸ்ரீ முஷ்ணம் தெரு, ஸ்ரீ முஷ்ணம் 608 703, கடலூர் மாவட்டம், பக்கங்கள் 166, விலை 120 ரு.
டாக்டர் ராம் மனோகர் லோகியா இந்த தேசத்து சோஷலிஸ்ட் இயக்கத்தின் நிறுவனர். சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழ்ந்த மக்களுக்காகவும் வாழ்க்கையில் எந்த நலனையும் அனுபவிக்காத ஏழை மக்களுக்காக இடைவிடாது போராடியவர். வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ளாதவர். மிகச் சக்தி வாய்ந்த பேச்சாளராகவும், தலைசிறந்த பார்லிமென்டேரியனாகவும் விளங்கியவர். அவரது குடும்பத்தால் பல தலைமுறைகளாக (ஹோலா – இரும்பு) இரும்பு வணிகம் செய்து வந்ததால் லோகியா என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது. அவரது சுருக்கமான வரலாறு இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தவிர ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, ஒரு சமதர்ம வீரராக பாமர மக்களின் தலைவனாக ஒரு எழுத்தாளராக, புதிய சித்தாந்தங்களை உருவாக்குபவராக பல்வேறு கோணங்களில் அறிஞர்கள் பலர் எழுதிய கட்டுரைகளாக தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். மிகவும் பயனுள்ள நூல். – சிவா நன்றி: தினமலர், 12 பிப்ரவரி 2012.