உங்கள் மனசு

உங்கள் மனசு, மனநல ஆலோசகர் வி. சுனில்குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை – 14. விலை  ரூ. 200 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-1.html

பள்ளி, கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் இன்ஜினியர், வாலிப வயதுள்ள ஆண், பெண், கணவன் – மனைவி, அரசு அதிகாரிகள் ஆகியோரின் வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களைக் குறிப்பிட்டு அவை எவ்வாறு தீர்க்கப்பட்டன என்றும் கூறியுள்ளார். அவரவர் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பிடும்போது அழகிய உரைநடையில் கதைபோலவே சுவைபட விளக்கியுள்ளார். விறுவிறுப்புடன் படிக்கத் தூண்டும் புத்தகம்.  

கந்தபுராணம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை – 02. விலை ரூ. 117

கந்தபெருமானுடைய திருவிளையாடல்களை சுருக்கமாகக் கூறியுள்ள நூல், சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமுருக கிருபானந்த வாரியாரால் எழுதப்பட்டது.  

 

பஞ்சதந்திரக் கதைகள், ஜெ. குமணன், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 57, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ், ராமநாதபுரம், கோவை – 841045. விலை ரூ. 155

ஐந்து தந்திரங்களைக் கூறி ஒவ்வொரு தந்திரத்தையும் விளக்குவதற்கு ஏகப்பட்ட சிறுசிறு கதைகள் கூறப்பட்டுள்ளன. மொத்தம் 81 கதைகள் மகிழத்தக்க வகையில் சிரிக்கும் வகைகளில் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி 21-11-12        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *