பரதகண்ட புராதனம்

பரதகண்ட புராதனம், டாக்டர் கால்டுவெல், பதிப்பாசிரியர்: பொ. வேல்சாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 98. விலை ரூ. 95 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-7.html

நமது வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களை அணுகுவதற்கு எப்போதும் மூன்று பாதைகள் இருக்கின்றன. முதலாவது, நம்பிக்கையின் அடிப்படையில் அவற்றை கடவுளால் அருளப்பட்ட வாசகங்களாகக் கருதி வாசிப்பது. இரண்டாவது, தீவிர மத எதிர்ப்பின் அடிப்படையில் அவற்றை முற்றாக மறுப்பது. மூன்றாவதாக, அவற்றை இலக்கியப் பிரதிகளாகக் கொண்டு, அவை வெளிப்படுத்தும் உட்பொருளோடும் மறைபொருளோடும் அந்தக் காலகட்டத்தின் வரலாற்றின் பின்னணியில் மற்ற பிரதிகளோடு ஒப்பிட்டு ஆய்வுசெய்வது. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதி, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சரித்திரத்தையே உருவாக்கிய கால்டுவெல் எழுதிய இந்த நூல் மூன்றாவது வழிமுறையைப் பின்பற்றுகிறது. நமது வேதங்களின்மீது இருக்கும் புனிதத் திரையை விலக்கி, அவை மனிதர்களுக்கும் இயற்கைக்குமான போராட்டத்தின் விளைவுகள் என்பதை முன்வைக்கிறது. மேலும் இந்து மதத்தை காலமாற்றத்தால் விளைந்த பல்வேறு பரிமாணங்களுடன் ஆழமாக ஆய்வு செய்கிறது. இந்த நூலின் மொழி நடை 150 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் எவ்வாறு இருந்தது என்பதற்கு ஒரு சுவாரசியமான ஆவணம். நன்றி: குங்குமம் 26-11-2012        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *