உங்கள் ராசிப்படி உங்களுக்கான பரிகாரம் பூஜை விரதம்
உங்கள் ராசிப்படி உங்களுக்கான பரிகாரம் பூஜை விரதம், யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், சென்னை, விலை 75ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-475-7.html பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் கூடுதலான நற்பலன்களைப் பெற ஜோதிட ரீதியாக வழிகாட்டும் நூல். 12 ராசிக்காரர்களும் ஆயுள் முழுவதும் வழிபட வேண்டிய தெய்வங்கள், செல்லவேண்டிய கோயில்கள், சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள், என்னென்ன பூஜைகள், எந்த ராசிக்கு எந்த விரதம், செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றை ஜோதிட ரீதியாக கணித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. குமுதம் பக்தி ஸ்பெஷல் பல்வேறு சமயங்களில் இணைப்பாக வந்து பரபரப்பாகப் பேசப்பட்ட ஜோதிடம் சார்ந்த நூல்களைத் தொகுத்து, குமுதம் பு(து)த்தகம் முழுநூலாக வெளியிட்டிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 24/10/2012.
—-
அவரவர் நியாயம், முல்லைதாசன், வரமருள் பதிப்பகம், சென்னை, பக். 126, விலை 85ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-4.html
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும்தான் ஒரு மனிதனை ஏதாவது செய்யவைக்கின்றன. அல்லது அந்தச் செயலுக்கு கருவியாகக் கொள்கிறது. அவன் செய்த அந்தச் செயல் சரியோ தவறோ அதை நியாயப்படுத்துவதற்கு அவன் போராடுகின்ற போராட்டம்தான் இந்த சிறுகதைத் தொகுப்பு முழுவதுமே பேசப்பட்டுள்ளது. போலி சமூகத்தை எதிர்த்து ஒரு எதிர்நீச்சல் போட்டிருக்கிறார் ஆசிரியர். நன்றி: குமுதம், 24/10/2012.