உண்மை

உண்மை, கே.எஸ். நாகராஜன் ராஜா, கிரி டிரேடிங் ஏஜென்சிஸ், விலை 120ரூ.

ஷீரடி பாபாவின் ஜீவசமாதி இருக்கும் இடத்தையும், கர்ம வினையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்ற நிலையையும், பரமாத்மா அனைத்து விஷயங்களுக்கும் சாட்சியாக இருக்கிறார் என்ற தகவல்களுடன், பாதாள புவனேஷ்வர், காமாக்யா, கைலாஷ் – மானசரோவர் போன்ற பல ஆன்மிக தலங்களிலும் நூலாசிரியர் பெற்ற அனுபவங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/12/2015.  

—-

சிந்திப்போமா?, ஆ. சூசைமாணிக்கம், வாசன் பிரதர்ஸ் வெளியீடு, விலை 50ரூ.

ஒழுக்க நெறிகளை வலியுறுத்துவதுடன், அனைவரும் எல்லாம் பெற வேண்டும் என்ற தத்துவத்துடன் எழுதப்பட்ட உரைநடைக் கவிதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 9/12/2015.  

—-

தமிழை வளர்த்த முக்கிய தமிழ் அறிஞர்கள், மறைமலை ராதா, மணிமேகலைப் பிரசுரம், விலை 60ரூ.

தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத அய்யர், பரிதிமாற் கலைஞர், ஆறுமுக நாவலர், நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் உள்பட 20 தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல். சிறந்த நடையில் எழுதியுள்ள மறைமலை ராதா பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 9/12/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *