உலகம் அழியுமா? ஏன்? எப்போது? எப்படி?
உலகம் அழியுமா? ஏன்? எப்போது? எப்படி?, பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பஈ, ஸலா பப்ளிகேஷன், 21/10, 4-வது தெரு, மந்தைவெளி பாக்கம், சென்னை – 28. விலை ரூ. 100
உலக அழிவு குறித்து அன்றும் இன்றும் வெளியான சுவையான திகிலூட்டும் பல்வேறு செய்திகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக – விஞ்ஞானிகள், வான்கலை வல்லுநர்கள், புவியியல் அறிஞர்கள், கடல் ஆராய்ச்சியாளர்கள், ஜோதிடர்கள் அனைத்து மத தீர்க்க தரிசிகள், ஞானிகள், நாஸ்டர்டாம், சாக்ரடீஸ் போன்ற முற்கால தத்துவவாதிகள்… என்று பலரும் பல்வேறு காலகட்டங்களில் கூறிய காரணங்களை எல்லாம் தேடிப் பிடித்து, அதற்குரிய புகைப்படங்களுடன் தொகுத்துள்ளார். அதே சமயம், ‘இக்காரணங்களால் எல்லாம் இவ்வுலகம் அழியாது’ என்று உறுதிபடக் கூறும் ஆசிரியர், ‘இந்த அண்டசராசரங்கள் அனைத்தும் ஒருநாள் திடீரென முழுமையாக அழியும்’ என்றும், அது எப்படி, ஏன் என்றும் இஸ்லாமிய அடிப்படையில் விவரிக்கிறார். அழிவுக்கு முன் உலகில் தோன்றும் அடையாளங்கள் எவை? அவற்றில் இது வரை வெளியானவை, இனிமேல் வெளியாக இருப்பவை எவை, எவை என்பதையும் விளக்குகிறார். தவிர, அழிவு நாள் அன்று நடக்கும் முதல் காட்சி, இரண்டாம் காட்சி, மூன்றாம் காட்சிகளையும், அதற்குப் பின் நிகழக்கூடிய விஷயங்களையும் குர்ஆன் மற்றும் ஹதிஸ் வசனங்களுடன் கண்களால் காணுவதுபோல் படம்பிடித்துக் காட்டுகிறார். மாயன் காலண்டர்படி 21.12.2012-ல் உலகம் அழியுமா, அழியாதா என்ற பரபரப்பான விவாதம் நடைபெறும் இத்தருணத்தில், இப்புத்தகம் வெளியாகியுள்ளது, படிக்கும் ஆவலை அதிகரித்துள்ளது. – பரக்கத் நன்றி: துக்ளக் 26-12-12