ஊழிக்காலம்
ஊழிக்காலம், தமிழ்க் கவி, தமிழினி.
இறுதிப் போரின் சாட்சி ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்தவை குறித்து நாம் அறிந்த செய்திகள் சொற்பம். மரணத்தை தொட்டுவிடும் தூரத்தில் கண்ட மக்களிடையே இன்னமும் துயரின் நெருப்பு மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீயை நெஞ்சில் சுமந்து, நடந்தவற்றுக்கு சாட்சியாய் இருந்த 66 வயதுப் பெண்ணாகிய தமிழ்க்கவி எழுதிய தன்வரலாற்று நாவல் இது. ஈழப்போரின் இறுதிக்கால அவலம், துயரம், கோரம், கொடூரம் என்று ஒவ்வொருவருக்குள்ளும் இறுகிக் கிடக்கும் துயர நினைவுகளை தன் நாவலில் கசியவிட்டிருக்கிறார் தமிழ்க்கவி. போர்க் குற்றங்களுக்கு சாட்சியான ஓர் ஆவணமாக இந்நூலை தமிழ்க்கவி உருவாக்கியுள்ளதாக தமிழினி பதிப்பகம் கூறுகிறது. நன்றி: இந்தியடுடே, 29/1/2014.
—-
தங்க விலை ரகசியம், கே.எஸ். ராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, தபால் பெட்டி எண். 617, மயிலை, சென்னை 600004, பக். 204, விலை 90ரூ.
எழுத்து மூலம் மற்றவர்களை மகிழ்விக்க விரும்பும் ஆசிரியர் வட்டார ஏடுகளில் எழுதிய, 30 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தங்கத்தின் மீது எல்லாருக்கும் இருக்கும் பற்று, அதில் ஏற்படும் அபரிமித சிக்கல்களை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதியுள்ளார். அது மட்டும் அல்ல, புது வருஷடைரி, காலண்டர்களுக்கு ஆசைப்படும் விஷயத்தை, தம்பையாவுக்கு வைத்த செக், மற்றும் கொசுத் தொல்லையை வைத்து எழுதப்பட்ட கட்டுரையில், கூடங்குளம் மின் உற்பத்திக்கு நாராயசாமியை கேளுங்க என்ற கருத்தும், நகைச்சுவை உணர்வை பிரதிபலிப்பதாகும். இவரது எழுத்துக்களில் அங்கத உணர்வு இழையோடுவதால், மத்திய தர மக்களை நிச்சயம் ஈர்க்கும். நன்றி: தினமலர், 2/2/2014.