தத்துவவேசினி நூல் வரிசை
தத்துவவேசினி நூல் வரிசை, The thinker இதழ்களின் வழி பதிவுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
தமிழ்நாட்டின் நாத்திக வரலாறு திராவிடர் கழகத்துக்கும் நீதிக்கட்சிக்கும் முன்பே 1878-1888 வரை நாத்திக சங்கம் சென்னையில் செயல்பட்டு வந்ததை ஆவணங்களுடன் விளக்கும் பல தொகுப்பு நூல்கள் இவ்வரிசையில் உள்ளன. தத்துவம்-கடவுள்-நாத்திகம், சாதி-பெண்கள்-சமயம், காலனியம்-விஞ்ஞானம்-மூடநம்பிக்கைகள் ஆகியவை தமிழிலும், 2 வரிசை நூல்கள் ஆங்கிலத்திலும் பதிப்பிக்கப்பட்டுள்ளதாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கூறுகிறது.
—-
சேரன்மாதேவி, பழ. அதியமான், காலச்சுவடு.
குருகுலப் போராட்டமும் திராவிட எழுச்சியும் சேரன்மாதேவி குருகுலத்தில் நடந்த சாதியத்தை அடிப்படையாகக் கொண்ட ஏற்றத் தாழ்வுகளையும் சம்பவங்களையும் காங்கிரஸ் கட்சிக்குள் அதன் விளைவுகளையும் பெரியார் அது குறித்து அதிருப்தி தெரிவித்து வெளியேறி திராவிட இயக்கம் தோற்றுவித்ததையும் ஆவணங்களுடன் பதிவு செய்திருக்கிறது. உண்மைகளை ஆதாரங்களுடன் இந்நூல் விளக்குவதாக காலச்சுவடு பதிப்பகம் கூறுகிறது. நன்றி: இந்தியா டுடே, 29/1/2014.