உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி

உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் முதல் தொகுதி, பழ.அதியமான், பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், விலை 600ரூ. காலத்தின் கருவூலம் உ.வே.சாமிநாதையரின் சமகாலப் புலவர்கள், அடுத்த தலைமுறைப் புலவர்கள், உயர் அதிகாரிகள், ஆதினக் கர்த்தர்கள் போன்றோர் அவருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இப்புத்தகம். பிறருக்கு, சாமிநாதையர் எழுதிய கடிதங்கள் இதில் குறைவு. எனினும், தனக்குக் கடிதம் எழுதியவர்களுக்குப் பதிலாக அவர் எழுதிய சில குறிப்புகள் உண்டு. ஜி.யு.போப், ஜுலியன் வின்சோன், பொன்னம்பலம் குமாரசாமி உள்ளிட்ட சிலர் தவிர, மற்றவர் அனைவரும் தமிழிலேயே கடிதங்களை எழுதியுள்ளனர். […]

Read more

சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்

சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ.அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை 275ரூ. தமிழ்நாட்டு அரசியலை அப்படியே புரட்டிப் போடக் காரணமான ஊர் சேரன்மாதேவி. அந்த ஊரில் இருந்து செயல்பட்டு வந்த குருகுலத்தில் குறிப்பிட்ட நிகழ்வு மட்டும் நடக்காமல் போயிருக்குமானால், தமிழகத்தின் கடந்த முக்கால் நூற்றாண்டு வரலாற்றை கணிப்பதே சிரமமாக இருக்கும். காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரியார் வெளியேறாமல்கூட இருந்திருக்கலாம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளே உருவாகி இருக்காது. அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பற்றிய […]

Read more

சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்

சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ.அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை 275ரூ. அரிய தகவல்களின் தொகுப்பு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயரால் நடத்தப்பட்ட குருகுலத்தில் பிராமணர், பிராமணரல்லாத மாணவரிடையே கடைப்பிடிக்கப்பட்ட சாதி ஏற்றத்தாழ்வு 1924 ஆம் ஆண்டு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் பிற புரவலர்களிடம் நிதி திரட்டி நடத்தப்பட்ட இந்த குருகுலத்தில் சமத்துவத்தைக் கொண்டுவர வரதராஜுலு நாயுடு, பெரியோர் முதலியவர்கள் போராடினர். பத்திரிகைகள், பொதுமேடைகள், காந்தியிடம் புகார் என்று பல்வேறு கட்டங்களில் இந்த பிரச்னை விவாதிக்கப்பட்டது. பெரியார் […]

Read more

தத்துவவேசினி நூல் வரிசை

தத்துவவேசினி நூல் வரிசை, The thinker இதழ்களின் வழி பதிவுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். தமிழ்நாட்டின் நாத்திக வரலாறு திராவிடர் கழகத்துக்கும் நீதிக்கட்சிக்கும் முன்பே 1878-1888 வரை நாத்திக சங்கம் சென்னையில் செயல்பட்டு வந்ததை ஆவணங்களுடன் விளக்கும் பல தொகுப்பு நூல்கள் இவ்வரிசையில் உள்ளன. தத்துவம்-கடவுள்-நாத்திகம், சாதி-பெண்கள்-சமயம், காலனியம்-விஞ்ஞானம்-மூடநம்பிக்கைகள் ஆகியவை தமிழிலும், 2 வரிசை நூல்கள் ஆங்கிலத்திலும் பதிப்பிக்கப்பட்டுள்ளதாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கூறுகிறது.   —-   சேரன்மாதேவி, பழ. அதியமான், காலச்சுவடு. குருகுலப் போராட்டமும் திராவிட எழுச்சியும் சேரன்மாதேவி […]

Read more

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு, பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கங்கள் 480, விலை 325ரூ. மறுக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் –சா. கந்தசாமி சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்தார்கள். பத்திரிகைகள் நடத்தினார்கள். சத்தியாகிரகம் புரிந்தார்கள். தடியடி பட்டார்கள். சிறை சென்றார்கள். சிறையில் செக்கிழுத்தார்கள். கடைசியாக தூக்கில் போடப்பட்டார்கள். அவர்களில் பலரின் போராட்டப் பங்களிப்பு என்பது அதிகமாக இருந்தாலும், தங்களின் சொந்த நடத்தைகள், கருத்துக்கள், பேச்சுக்களால் தலைவர்களிடம் முரண்பட்டதால் பெரிய பதவிகளை பெறமுடியவில்லை. […]

Read more