ராஜாஜியின் கருத்துக்கள்

ராஜாஜியின் கருத்துக்கள், ராஜாஜி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 176, விலை 70ரூ. 20 ஆம் நூற்றாண்டின் ‘இந்திய அரசியல் ஞானி’ என்று பாராட்டப்பட்டவர் சக்கரவர்த்தி சி. ராஜகோபாலாச்சாரியார். விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்திக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்பையும் வகித்தவர். பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்பழுக்கற்றவராகத் திகழ்ந்த இந்த மூதறிஞரின் கருத்துக்கள், தொலைநோக்குக் கொண்டவை. 1970-71ல் மத்தியிலும், மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் நிகழ்ந்த பல்வேறு பிரச்னைகள், சம்பவங்கள் குறித்து இவர் கூறிய கருத்துகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியாகின. […]

Read more

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு, பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கங்கள் 480, விலை 325ரூ. மறுக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் –சா. கந்தசாமி சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்தார்கள். பத்திரிகைகள் நடத்தினார்கள். சத்தியாகிரகம் புரிந்தார்கள். தடியடி பட்டார்கள். சிறை சென்றார்கள். சிறையில் செக்கிழுத்தார்கள். கடைசியாக தூக்கில் போடப்பட்டார்கள். அவர்களில் பலரின் போராட்டப் பங்களிப்பு என்பது அதிகமாக இருந்தாலும், தங்களின் சொந்த நடத்தைகள், கருத்துக்கள், பேச்சுக்களால் தலைவர்களிடம் முரண்பட்டதால் பெரிய பதவிகளை பெறமுடியவில்லை. […]

Read more