எனது இந்தியா

எனது இந்தியா, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2, விலை: ரூ. 355. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-805-3.html

இந்தியாவின் வரலாற்றை புதிய பாணியில் கூறுகிறார், பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். இந்து தேச சரித்திரத்தை, ஆதியோடு அந்தமாகக் கூறாமல், முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும், அழகான நடையில் அபூர்வமான படங்களுடன் விவரிக்கிறார். இந்த நூலை எழுதுவதற்காக அவர் இந்தியா முழுவதும் பலமுறை அலைந்து திரிந்திருக்கிறார். சரித்திர புகழ் பெற்ற இடங்களை நேரில் பார்த்திருக்கிறார். அவருடைய கடும் உழைப்பு, ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது. வரலாற்றில் அக்கறை உள்ள அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.  

 

அடால்ப் ஹிட்லர், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32 – பி, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், சென்னை – 17, விலை: ரூ. 90.

ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் பற்றி மிக தெளிவாக சொல்கிறது இப்புத்தகம். மனித குலத்தின் மறக்க முடியாத துயரம் ஹிட்லர் என்கிறார் புத்தக ஆசிரியர் எம்.ஏ. பழனியப்பன். ஹிட்லரின் பிறப்பு, அவர் வளர்ந்த விதம், அவரது அயராத முயற்சி, கொடூர குணம், அதனால் ஏற்பட்ட வீழ்ச்சி, அவருக்கு பின்னர் ஜெர்மனி என்று எல்லாவற்றையுமே படங்களுடன் குறிப்பிட்டு இருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு.  

 

தீரன் சின்ன மலை, “வின் வின் புக்ஸ்”,1620, ’ஜே’ பிளாக், 16 – வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை – 40, விலை: ரூ. 40.

வெள்ளையர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்த பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போலவே, வெள்ளையர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து, போர் புரிந்து இறுதியில் தூக்கு மேடை ஏறியவர் தீரன் சின்னமலை. இவர் கொங்குச் சீமையை சேர்ந்தவர், மேலப்பாளையத்துக்கும், ஈரோட்டுக்கும் இடையே ‘ஓடாநிலை’ என்ற இடத்தில் கோட்டை கட்டி ஆண்டவர். வெள்ளையர்களை ஐந்து போர்களில் தோற்கடித்தவர். அவருடைய வீர வரலாற்றை, தெளிந்த நீரோடை போன்ற நடையில் அருமையாக எழுதியுள்ளார் செவல்குளம் ஆச்சா. (புலவர் அ.ச.குருசாமி).   நன்றி: தினதந்தி (3.4.2013).  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *