எனது வாழ்க்கை – சார்லி சாப்ளின்
கேபிள் தொழிலும் அரசியல் கதிகளும், சாவித்திரி கண்ணன், மாணிக்க சுந்தரம் பப்ளிகேஷன்ஸ், சென்னை – 41, பக். 80, ரூ. 30.
வீட்டுக்கு கேபிள் இணைப்புப் பெற நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலாக தர வேண்டியதை சூழ்நிலைக்குக் காரணம், நிச்சயமாக கேபிள் தொழிலில் உள்ள அரசியல்தான் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மட்டும்தான் கேபிள் தொழில் அரசியல் சதிகளால் சிக்கி சின்னா பின்னப்பட்டிருப்பதாக நூலாசிரியர் புள்ளி விவரத்தோடு விவரித்துள்ளார். அரசியல் ஆதிக்கத்தில் கேபிள் தொழிலில் பணம் எப்படிச் சுருட்டப்படுகிறது? எப்படியெல்லாம் வருவாய்க்கான வடிவத்தை கேபிள் டிவி உலகம் அடைந்தது? சுமங்கலி கேபிள் தொடங்கப்பட்ட போது ஏற்பட்ட அதிரடி அராஜகங்கள்; சன்டிவியின் தந்திரத்தால் கலைஞர் டிவி உருவான கதை அரசு கேபிள் உருவானதின் பின்னணி; பிறகு அது முடக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது; திடீர் திடீரென்று முளைக்கும் உள்ளூர் சேனல்களின் வரைமுறையற்ற தன்மை; கேபிள் வருமானத்தில் உள்ள வரி ஏய்ப்புகள்; மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது; இனி கேபிள் டிவியின் எதிர்காலம் என பல தலைப்புகளில் கேபிள் தொழிலைப் பற்றி அலசி ஆராய்ந்ததுள்ளார் நூலாசிரியர். முக்கியமான நூல்.
—
வாசிப்பும் விமர்சனமும், கா. அய்யப்பன், காவ்யா, சென்னை – 24, பக். 108, ரூ. 80.
இலக்கணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாலும், ஆழ்ந்த புலமை உள்ளவர்களாலும் தான் இத்தகைய நூல்களைச் செம்மையாக உருவாக்கமுடியும் என்பதில் மெய்ப்பித்திருக்கிறார் நூலாசிரியர். அவ்வப்போது அவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் நூலாகியிருக்கிறது. தொல்காப்பியத்தில் அறியப்பட்டதும், அறியப்படாததும், உரைநடை இலக்கணப் பிரதிகள் மீட்டுவாக்கத்தில் பவணந்தி முனிவரின் நன்னூல், பிராமணரல்லாத சைவப் பிரதிகள் பதிப்புகள், கூட்டுக் குடும்பத்தில் உள்ள பெண்களின் நிலைமை, கழிவறைக் கிறுக்கல்கள், இலக்கண – இலக்கியங்களில் மாற்று பாலியல் பதிவுகள் முதலியவை ஆய்வை மெருகேற்றியுள்ளன. குறிப்பாக, ‘அல்குல்தைவரல்’ கட்டுரை இலக்கியவாதிகள் படிக்க வேண்டிய ஒன்று. காரணம், சமீப காலமாக ‘அல்குல்’ என்பதற்கு பலர் தவறான பொருள்களைத் தந்து பலரையும் குழப்பி வருகின்றனர். இதைப் படித்தால் கட்டயாம் தெளிவு பிறக்கும்.
—
எனது வாழ்க்கை – சார்லி சாப்ளின், தமிழில்: சிவன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை – 17, பக். 288, ரூ. 200. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-469-1.html
உலகத்தையே சிரிக்க வைத்த ஒப்பற்ற கலைஞனான சார்லி சாப்ளினின் வாழ்க்கை எவ்வளவு துயரம் நிரம்பியது என்பதை விவரிக்கிறது இந்நூல். 1889 ஏப்ரல் 16 ஆம் நாள் சார்லி சாப்ளின் பிறந்ததில் தொடங்கி நாடகக் கலைஞர்களாக இருந்த அவருடைய பெற்றோரின் வறுமை நிறைந்த வாழ்க்கை, பணத் தேவைக்காக சிறுவன் சார்லி பார்த்த பல்வேறு வேலைகள், தந்தையின் மரணம், தாயின் மனநிலை பாதிப்பு, நாடகத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு, பார்வையாளர்களின் அமோக ஆதரவு, ஒரு கட்டத்தில் பார்வையாளர்களைக் கவர முடியாமல் அவமானமடைந்தது, திரைப்பட வாய்ப்பு, பார்வையாளர்களின் அமோக ஆதரவு, ஒரு கட்டத்தில் பார்வையாளர்களைக் கவர முடியாமல் அவமானமடைந்தது. திரைப்படவாய்ப்பு, சொந்த நிறுவனம் தொடங்கி திரைப்படம் தயாரித்தது, புகழின் உச்சிக்குப் போனது, மகாத்மா காந்தி, நேரு, வின்ஸ்டன் சர்ச்சில், குருஷேவ், சூ என் லாய் போன்ற தலைவர்களைச் சந்தித்தது உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் கால வரிசைப்படி சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நடிகை மேரி டோரா, குருஷேவ் போன்றவர்களுடனான சாப்ளினின் சந்திப்பும் ‘கஸ்யோ வர்தா’ படச் சிறப்புக் காட்சியின்போது நடந்த பத்திரிகையானவை. சார்லி சாப்ளின் வெளியிட்ட ‘மை லைஃப் இன் பிக்சர்ஸ்’, ‘மை ஆட்டொகிராபி’ ஆகிய புத்தகங்களில் இருந்து தொகுக்கப்பட்ட புத்தகத்தைச் சுருக்கி தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார் சிவன். ஓர் உன்னதக் கலைஞனின் ஒளிவுமறைவற்ற வாழ்க்கைப் பதிவு. நன்றி: தினமணி (8.4.13).