சாந்தனைச் சுற்றி ஏன் வண்டுகளாய் மொய்க்கின்றனர்?

சாந்தனைச் சுற்றி ஏன் வண்டுகளாய் மொய்க்கின்றனர்?, சூ.குழந்தைசாமி, காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை – 28, பக்கம்: 196, விலை : ரூ.20.

குழந்தைகளுக்காக எழுதப்பட்ட குட்டி குட்டி கதைகளைக் கொண்ட நூல் இது. மற்ற குழந்தைகள் கதைகள், நீதக் கதைகளில் இருந்து இது வேறுபட்டதாக உள்ளது. குழந்தைகள் தங்களின் பிரச்சனைகளைத் தாங்களே, சிறுசிறு முயற்சிகள் செய்து பார்த்து, புத்திசாலிதனமாக தீர்த்துக் கொள்வது எப்படி என்று கற்றுத்தரும் நூல். அப்படிச் செய்வதன் மூலம், குழந்தைகள் மற்றவர்களுக்கும், சுற்றியுள்ள இயற்கை, பசுமை, விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் நன்மை உண்டாக்குபவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள் முடியும் என்ற உண்மையை உணர்த்தும் நூல். குழந்தை உள்ளம் கொண்டோர் அனைவரும் படிக்கலாம். நூல் சிறிது. பயன் பெரிது. – இரா. மணிகண்டன். நன்றி: குமுதம் (3.4.2013)  

—–

 

வெள்ளந்தி மனிதர்கள், ஆ.அறிவழகன், செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எ.எம்.டி.ஏ.நகர், சிட்லபாக்கம், சென்னை – 64. பக்கம்: 96, விலை ரூ. 50.

சிறுகதை என்ற வரையறைக்குள் அடக்கி அல்லது அடங்கிவிடாமல், உள்ளதை உண்மையாய் பதிவு செய்து ஒரு நல்ல சிறுகதை இப்படியும் இருக்கலாமோ என்று படிப்போரை கேட்க வைக்கிறது ‘வெள்ளந்தி மனிதர்கள்’ சிறுகதைத் தொகுப்பு. நரசப்பாவோ, இராமாயி கிழவியோ படிப்போருக்கு புதியவர்கள் அல்ல. ஆனால் பதிவு செய்யாமல் போன விளிம்பு நிலை மாந்தர்கள். அவர்களை அவர்களோடு வாழ்ந்த வாழ்வை அவர்களின் உழைப்பை, அவர்களின் வெள்ளந்தியான உள்ளத்தை படிப்போர் அனைவருக்கும் ஞாபகப்படுத்தி, மனதில் பதியன் போட்டு விட்டிருக்கிறார் நூலாசிரியர். பிச்சைக்கண்ணு, மிட்டாய்க்கிழவி, கடைநிலை ஊழியன் ஆரோக்யம், கருப்பாயி, அசலான், சீதை என்று சாம்பிலுக்கு ஒரு வெள்ளந்தி மனிதர்களை நம் மனதிற்குள் விதைத்திருக்கிறார் ஆசிரியர், முளைக்க விடுவோம் என்ற நம்பிக்கையில். நன்றி: குமுதம் (3.4.2013)  

—–

 

யாரும் யாராகவும், ஏர்வாடி எஸ்.இராதகிருஷ்ணன், கவிதை உறவு, 420இ, மலர்க்குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு, சென்னை – 40. பக்கம்: 128. விலை: ரூ. 70.

கவிதை சிலருக்குத்தான்/ கவிதயாக இருக்கிறது. காலத்தை வெல்கிறார்கள். இதுதான் ஏர்வாடியாரின் அகஉள்ளம். அவரே சொல்வது போல், நினைவிலிருந்தவற்றை உணர்ந்து உணர்த்தியிருக்கும் உரையின் தொகுப்புதான் இக்கவிதைகள். எல்லாவற்றையும் கவிதையாக்க முடிந்திருக்கிறது. தாயை, தாரத்தை, இந்தியாவை, காதல், கல்யாணம், இறைவன், அரசியல், நீரின் நிறம், புதிய ஐந்திணை என எதையும் விட்டு வைக்கவில்லை. எழுதாத கவிதை என்று எதுவுமில்லை அதை எழுதாத கவிஞர்கள்தாம் இருக்கிறார்கள் என்பதை ‘ யாரும் யாராகவும்…’ இருக்கலாம் எனக் காடடிச் செல்லும் இத்தொகுப்பில் நீங்கள் கூட பாடுபொருளாக இருக்கலாம். நன்றி: குமுதம் (3.4.2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *