என் ஆசிரியப்பிரான்

என் ஆசிரியப்பிரான், எசென்சியல் பப்ளிகேஷன்ஸ், கோவை, விலை 145ரூ.

ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பல இலக்கியங்கள் அழிந்துபோகாமல் காத்த பெருமை உ.வே. சாமிநாதய்யருக்கு உண்டு. கிராமம் கிராமமாக அலைந்து திரிந்து, ஓலைச்சுவடிகளை தேடிக்கண்டுபிடித்து அச்சடித்து வெளியிட்டார். அவர் இப்படி ஓலைச்சுவடிகளை சேகரித்து அச்சிடாமல் இருந்தால், பல சுவடிகள் அழிந்து போயிருக்கும். உ.வே.சாமிநாதய்யரின் சேவைகளையும், பெருமைகளையும் அவருடைய மாணவரும், கலைமகள்இலக்கிய இதழின் முன்னாள் ஆசிரியருமான கி.வா.ஜகந்நாதன் இந்நூலில் எழுதியுள்ளார். அத்துடன் இலக்கியம் பற்றியும், புலவர்கள் பற்றியும் பல அரிய செய்திகள் இந்நூலில் நிறைந்துள்ளன. – நன்றி: தினத்தந்தி, 12/11/2014.  

—-

 

இலக்கிய சிறப்பு வாய்ந்த மலர், வைத்தியநாதன், மலர் தயாரிப்பு, பாவை சந்திரன், சென்னை, விலை 100ரூ.

தினமணி தீபாவளி மலர் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் அல்லாது, இலக்கியச் சிறப்புடன் திகர்கிறது. என் மனைவி எம்.எஸ். சுப்புலட்சுமி என்ற தலைப்பில் கல்கி சதாசிவம் எழுதிய கட்டுரை, புதுமைப்பித்தன் எழுதிய கட்டுரை, புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை குறுநாவல், மற்றும் பிரபல எழுத்தாளர்களின் கதைகள், ஆன்மிக கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தளிக்கின்றன. – நன்றி: தினத்தந்தி, 12/11/2014.

Leave a Reply

Your email address will not be published.