எப்படியும் சொல்லலாம்

எப்படியும் சொல்லலாம், இரா. எட்வின், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 65ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-205-6.html ஆசிரியராக பணியாற்றும் கவிஞர் இரா. எட்வினின் முதல் கவிதை தொகுப்பு ‘எப்படியும் சொல்லலாம்’. மனைவியின் பெயரில் எழுதும் எழுத்தாளன், தன் கையில் காசில்லாத நிலையை குழந்தைகளிடம் அப்படி(யும்) சொல்லலாம் என யோசிக்கும் ஏழை, மனிதனை மலம் திண்ண வைத்த சாதிய கொடுமை, பாதுகாப்பின் பேரில் ராணுவம் மேற்கொள்ளும் வன்முறை, வட்டி வசூலிக்க வந்தவரிடம் அன்புடன் தாவும் குழந்தை, பள்ளிகளின் நன்கொடை வசூல் என இச்சமூகத்தில் நிலவும் கீழ்மைகளையும், சிதிலங்களையும் இரா. எட்வின் தன் கவிதைகளில் பதிவு செய்துள்ளார். இத்தொகுப்பில் கவிதைகளில் அடியோடும் நகைச்சுவையும், சோகமும் நம்மை பதற வைக்கிறது. என்ன தெரிந்து என்ன வகுப்பறையில் பசங்க எனக்கு வைத்த பெயர் தெரியாமல் கவிஞர் தன்னைத் தானே கேலி செய்து கொள்கிறார். இறந்த குழந்தையின் உள்ளங்கையில் ஆழமாய் நீளமாய் ஆயுள் ரேகை. வாழ்வின் முரண் கொடுமையானது யாரை குறை சொல்ல… காஷ்மீரில் குச்சி பொறுக்கிய காகம் கூடு கட்டும் கராச்சியில் காகத்தை யார் கட்டுப்படுத்த முடியும். இரா. எட்வினின் கவிதைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளது. -நிவில். நன்றி:  புதிய தரிசனம், 1/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *