எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி
எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி, விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ.
திரைப்பட உலகில் மிகப்பெரும் சாதனை நிகழ்த்தியவர்களில் ஒருவர் நாகி ரெட்டி. அவரை முதலாளி என்றே எம்.ஜி.ஆர். அழைப்பார். எம்.ஜி. ஆரை வைத்து நாகிரெட்டி தயாரித்த மிகப்பெரிய வெற்றிப்படம் எங்கவீட்டுப் பிள்ளை. அதுமட்டுமல்ல, எம்ஜி.ஆரை வைத்து நம் நாடு படத்தை பத்தே நாட்களில் எடுத்து சாதனை படைத்தார். என்.டி.ராமாராவ் நடித்த பாதாள பைரவி ஜெமினிகணேசன் – சாவித்திரி நடித்த மிஸ்லியம்மா, மாயாபஜார் உள்பட ஏராளமான படங்களை நாகிரெட்டியின் விஜயா – வாகினி ஸ்டூடியோ தயாரித்தது. சினிமாவுக்கு அப்பால், குழந்தைகளுக்காக அம்புலிமாமா பத்திரிகையை தமிழ் உள்பட 12 மொழிகளில் நடத்தினார். மேல்நாடுகளில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு இணையாக விஜயா ஆஸ்பத்திரியை தொடங்கினார். இப்படி பெரும் சாதனைகளை நிகழ்த்திய மாமனிதர் நாகிரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை, அவருடைய மகன் விஸ்வம் (விஸ்வநாத ரெட்டி) அருமையான நூலாக எழுதியுள்ளார். உணர்ச்சிமயமான நடை. நிறைய படங்கள், புத்தகத்துக்கு அழகு சேர்க்கின்றன. எல்லோரும் படித்து, ரசித்து, பாதுகாக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.
—-
நவாம்ச ரகசியங்கள், மணப்பள்ளி சிவ.வீரமணி, வெளியீடு ராஜமாணிக்கம்மாள், சென்னை, விலை 50ரூ.
12 ராசியைப் போல் 12 நவாம்சங்கள் அமைப்பு ஜாதகத்தில் உண்டு. நவாம்சம் பெற்றவரின் வாழ்க்கை முறை, பிறப்பு, இறப்பு, தோற்றம், குணம், வருமானம், கல்வி உள்ளிட்ட அனைத்தையும் இந்த நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 1/7/2015.