எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். பா. தீனதயாளன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 452, விலை 300ரூ.

எம்.ஜி.ஆரின் பிறப்பில் தொடங்கி, இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை இந்நூல் சுவைபட விவரிக்கிறது. நூலின் முகப்பில் சொல்லியிருப்பதைப்போல், திரையுலகம் அரசியல் இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய அவரின் மலைப்பூட்டும் சரித்திரத்தில், அதிகம் வெளிவராத, ஆனால் ஆதாரப்பூர்வமான தகவல்கள் இந்நூலில் நிரம்பவே இருக்கின்றன. எம்.ஜி.ஆரின் குழந்தைப் பருவத்தையே விவரிக்கும் முதல் அத்தியாயத்திலேயே, அரை வயிற்றுச் சாப்பாடாவது கிடைக்கட்டும் என்று நாடகக் கம்பெனியில் அவரைச் சேர்த்து விடுவதும், நாடக வாத்தியார் அவரைச் சேர்த்து விடுவதும், நாடக வாத்தியார் காளி என். ரத்தினத்திடம் பிரம்படி பட்டதும் நெஞ்சைத் தொடுகிறது. சினிமாவில் இருதுருவங்களாக இருந்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் ஆரம்ப காலத்தில் எந்த அளவுக்குப் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டார்கள் என்பதையும், அந்தக் கஷ்டகாலத்தில் எம்.ஜி.ஆர். எத்ததைகய இயல்பு கொண்டவராக இருந்தார் என்பதையும் இந்த நூலில் சிவாஜியின் பார்வையிலேயே விவரித்திருக்கிறார் நூலாசிரியர். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்திருக்கும் நூலாசிரியர் பா. தீனதயாளனின் உழைப்பு நூல் முழுக்கத் தெரிகிறது. தரமான காகிதத்தில் அழகுற அச்சடிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நன்றி: தினமணி, 19/1/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *