எரிக்கும் பூ

எரிக்கும் பூ, க. பாலபாரதி, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 192, விலை 145ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-4.html

இந்திய அளவில் நடைபெறும் சம்பவங்களின் வேர்களைப் புரிந்துகொள்வதற்கு உதவும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்திய நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகளில் மத்திய-மாநில அரசுகளும் சரி, அவைகளை வழிநடத்தும் கட்சிகளும் சரி தாம் கொண்டிருக்கும் கொள்கைகளைத் தெளிவாக விமர்சித்துள்ளார் ஆசிரியர். உலகமயமாக்கலால் காங்கிரஸ் அரசின் தலைமையில் இந்தியா தள்ளப்பட்டுள்ள படுகுழியையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். கட்சிகளின் சந்தர்ப்பவாத வாரிசு அரசியல், மத்திய அரசின் நீர்க்கொள்கை, உணவுக் கொள்கை. இலங்கியைல் தமிழ் இன அழிப்பில் இந்திய அரசின் நடுநிலை தவறிய அரசியலின் கோர வடிவம் என்று ஒன்றுவிடாமல் விமர்சிக்கிறார். உண்மையில் பக்கம் நின்று அச்சமின்றி இப்பூவை அவர் மலரச் செய்திருக்கிறார். அரசியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் படிக்க வேண்டிய பாடநூல் இது. நன்றி: குமுதம், 12/3/2014.  

—-

 பனிசுமந்த மேகங்கள், மு.ஆ.பீர்ஒலி, தமிழில் போ. மணிவண்ணன், தகிதா பதிப்பகம், கோவை, பக். 58, விலை 100ரூ.

1981ல் கவிஞர் பீர் ஒலி எழுதிய தி விஷன் என்ற ஆங்கிலக் கவிதை நூலின் தமிழாக்கம். நாடகம், கதை, கட்டுரைகளை மொழிபெயர்த்தலைவிட கவிதைகளை மொழிபெயர்ப்பது என்பது எளிதான விஷயமன்று. கற்பனைத்திறன், இருமொழி அறிவு, எழுதப்பட்ட காலம், இடம், பொருள் அறிந்து வாசகர்களின் மனதில் பதியவைக்க ஒரு தனித்திறன் வேண்டும். அந்தப் பணியை மணிவண்ணன் நேர்த்தியாக செய்திருக்கிறார். மூல நூலை விட்டு விலகிச் செல்லாது, அதே சமயம் தமிழின் சுவை குன்றாது படைக்கப்பட்ட மொழியாக்கம் இது. நன்றி: குமுதம், 12/3/2014.

Leave a Reply

Your email address will not be published.