எல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல்
எல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல், கர்னல் கணேசன், தாரிணி பதிப்பகம், 1, முதலாவது தெரு, சந்திரபாக் அவென்யூ, மைலாப்பூர், சென்னை 4, விலை 100ரூ.
நூல் ஆசிரியர் கர்னல் கணேசன், இந்திய ராணுவ அதிகாரியாக பணியாற்றிய அனுபவங்களை அவ்வப்போது தனது அண்ணனுக்கு எழுதிய கடிதங்களின் கோர்வையே இந்நூல். பாகிஸ்தான் போர், சீன போர் ஆகியவற்றில் பங்கெடுத்தது, வங்காளதேச உதயம் ஆகிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இளைஞர்கள் படித்து பின்பற்ற வேண்டிய புத்தகம். விலை 150ரூ. இதே நூலாசிரியர் எழுதிய மற்றொரு புத்தகம் சிவந்தமண், கைப்பிடி நூறு. போர்க்களம் பற்றிய பயனுள்ள தகவல் நிறைந்துள்ளன. விலை 100ரூ.
—-
தெய்வ மணம் கமழும் திருத்தலங்கள், பனையபுரம் அதியமான், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-162-5.html
தமிழ்நாட்டில் உள்ள 30 திருக்கோயில்கள் பற்றிய விவரங்கள் கொண்ட நூல் இது. இந்திரன் வணங்கிய தியாகேசர் வாழும் பூங்கோவில்(திருவாரூர்), வள்ளிக்குறத்தி வாழும் மலை (வள்ளி மலை), துணி வெளுத்தவரின் துயர் வெளுத்த தலம் (காஞ்சிபுரம்), வள்ளலார் பாடிப்பரவிய கோட்டம் (கந்தகோட்டம்) முதலிய தலைப்புகளில் கட்டுரைகளை அருமையான நடையில் எழுதியுள்ளார். பனையபுரம் அதியமான், ஒவ்வொரு கோவிலுக்கும் நேரில் சென்று, ஸ்தல புராணத்தையும், கல்வெட்டுகளையும் நன்கு ஆராய்ந்து, கட்டுரைகளை எழுதியருப்பதால், ஆலயங்களின் சிறப்பை நாம் முழுவதுமாக அறிய முடிகிறது. ஆலயங்களின் படங்களும், சிலைகளின் படங்களும் புத்தகத்தின் சிறப்பை மேலும் உயர்த்துகின்றன.
—-
நம் நாட்டு மூலிகைகள், விஜயவர்மன், அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல் தெரு, வடக்கு ஜகன்நாத நகர், வில்லிவாக்கம், சென்னை 49, விலை 35ரூ.
மூலிகைகளின் மருத்துவ குணங்கள் பற்றியும், அவற்றை பயன்படுத்தும் முறை குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 33 மூலிகைகளின் பயன்களையும் அவற்றின் வரலாற்றோடு சேர்த்து குறிப்பிடுவது இந்நூலின் சிறப்பு. ஆங்கில மருத்தவத்தில் குணமாக்க முடியாத நோய்களையும் மூலிகைகளின் மூலம் குணமாக்கிவிடலாம் என்பதை உணர்த்தியிருக்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 19/6/13.