எஸ்.எஸ்.போத்தையா கரிசக்காடு

எஸ்.எஸ்.போத்தையா கரிசக்காடு, பா. செயப்பிரகாசம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 188, விலை 140ரூ.

மொத்தம் 900 சொலவடைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார் எஸ்.எஸ். போத்தையா, அதை அகர வரிசைப்படுத்தி அழகாகப் பதிப்பித்துள்ளார் பா. செயப்பிரகாசம். பழமொழிகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தாமல், சொலவடைகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்துவதற்கான விளக்கத்தை இந்த நூல் தெரிவிக்கிறது. மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் முதலானவையும், கம்பளத்தார் குறித்த வரலாறும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. டைரி எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்த போத்தையாவின் டைரிக் குறிப்புகளும், அவர் பயணித்த ஊர்களின் காட்சிகளும் படங்களுடன் தரப்பட்டுள்ளன. படைப்பாளி ஒருவர் பற்றி, வரலாற்றுடன் அவர் வாழ்ந்த மண்ணின் மணத்தையும் அள்ளித் தரும் நூல் இது. -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 13/12/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *