ஐஏஎஸ் வெற்றி உங்கள் கையில்
ஐஏஎஸ் வெற்றி உங்கள் கையில், பேராசிரியர் நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை – 17, விலை 100 ரூ.
கல்வித்துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர் நெல்லை கவிநேசன். ஐஏஎஸ் கனவுடன் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு வழிகாட்டும் நோக்குடன் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. பாடத்திட்டம், கேள்விகள் கேட்கப்படும்விதம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மூன்று மாதிரி வினாத்தாட்களும் இடம்பெற்றுள்ளன.
—
108 காதல் கவிதைகள், ஆத்மார்த்தி, வதனம், 67 டிடி சாலை, ஆரப்பாளையம், மதுரை – 16, விலை 40 ரூ.
நூலாசிரியரின் பெயரைப் பார்த்தவுடன் ஏது, நம்மை இருண்மை, நீள்மை, ஏகாந்தம்… என்று தலைசுற்ற வைத்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்படலாம். ஆனால் எல்லாமே எளிய, இனிய காதல் கவிதைகள். ஸ்நேகிதம், முதன்முதல், காமம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கவிஞர் மீராவை அடிக்கடி நினைவுபடுத்துகிறது நூல்.
—
மிஸ்டர் போன்ஸ், டாக்டர் எம். பார்த்தசாரதி, விகடன் பிரசுரம், 757 அண்ணா சாலை, சென்னை – 2, விலை 80 ரூ.
உடலின் முக்கிய பாகமான எலும்பு பற்றியும் அதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்காகவே எளிய தமிழில் ஒரு மருத்துவரால் எழுதப்பட்ட நூல் இது. எலும்பு நோய் பாதுகாப்பு முறைகள் பற்றி அலசப்பட்டிருக்கிறது. – தொகுப்பு கா.சு. துரையரசு. நன்றி: இந்தியாடுடே 02.10.12