ஒரு கடல் ஒரு கைவிளக்கு
ஒரு கடல் ஒரு கைவிளக்கு, கவிஞர் பிரபாகர பாபு, தமிழ்க்கவி பதிப்பகம், பக். 144, விலை 125ரூ.
மனித மாண்புகளை மேம்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு. இந்தக் கைவிளக்கின் துணையுடன் சமுதாயத்தின் மூலை முடுக்குகளை எல்லாம் பார்க்க முடிகிறது. கவிஞர் பிரபாகர பாபு தன் கவியாளுமையை இந்த தொகுப்பில் ஆழமாக வழங்கியுள்ளார். தீயின் நாக்குகளைப் போல் தீண்டாமை குளிருக்கு இதமாக வருடும் தீயின் வெப்பக் கவிதைகள் இவை. வெளிச்சத்திற்கும், இருட்டிற்கும் இடைப்பட்ட கணத்தை வெளிச்சமாக்கும் வித்தை, இந்தக் கவிதை தொகுப்பு முழுவதும் காணப்படுகிறது. சுகத்தை விடவும் சோகமான சுமைகளே வாழ்க்கையை நகர்த்துகின்றன எனும் உண்மை, கசப்புக்கு அப்பால் தோன்றும் இனிப்பாகச் சுவைக்கிறது. உலைக் கொதிபிலும் முகம் இருந்தாலும் உள்ளத்து விழிகளைத் தூளியில் வைக்கும் சாதுர்யம் தாய்மைக்கு மட்டுமே தெரிந்த வித்தகம். (பக். 70). – முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 11/10/2015.