ஒரு சிறு தூறல்
ஒரு சிறு தூறல், வளவ. துரையன், தாரணி பதிப்பகம், சென்னை, பக். 72, விலை 100ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-241-8.html இந்த உலகம் உயிரோட்டமாக இருப்பதற்கும் புதுப்பொலிவோடு சிறப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. அது காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான். இதில் கவிதை விதிவிலக்கல்ல. காலத்திற்கேற்ப கவிதை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு கவிஞனின் வாழ்நாளிலேயே கவிதையின் போக்கு வெகுவாக மாறிப் போய்விடுகிறது. புளித்துப்போன சொற்களாலும், சலித்துப்போன உவமைகளாலும், அலுத்துப்போன உத்திகளாலும் இனி கவிதை எழுதினால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கவிதை மாறும்போது கவிஞனும் மாறவேண்டும். இல்லை எனில் இக்கவிதையின் முதல் கவிதையான பார்வை என்ற கவிதையில் சொல்லப்படும் பழுதாகி நிற்கும் பேருந்து போல் கவிஞனின் நிலை மாறிவிடும் என்கிறார் இந்நூலின் முன்னுரையில் கோ. மன்ற வாணன். நீண்ட காலமாக இலக்கியத்தில் இயங்கி வரும் வளவ. துரையன் கவிதை, நாவல், சிறுகதை எனப் பன்முக அடையாளங்கொண்ட படைப்பாளி. அவருடைய கவிதைகளே ஒரு சிறு தூறல் என நூல்வடிவம் கண்டுள்ளது. உதாரணத்திற்கு ஒன்று. மரணம் என் வீட்டெதிரில்தானா நிகழ வேண்டும் அம்மரணம் சடலமே முழுதாய் உருக் குலைந்ததே. இன்னமும் விழித்திருக்கும் கண்களில் கனவுகள் கசக்கிப் பிழிந்து குவிந்த துணியாய்க் கிடப்பதைப் பார்க்க முடியவில்லை. நாய்களைப் பார்க்கையில் நான் நிம்மதியாய் இருக்க முடியாது இனி. நன்றி: புதிய புத்தகம் பேசுது, 1/7/2014.
—-
இளையமகள் என்றொரு நதி, பொன்வைகறை பதிப்பகம், திருச்சி, விலை 50ரூ.
24 சிறுகதைகளின் தொகுப்பு நூல். வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை, அதன் யதார்த்ததங்களை கிராமத்து பேச்சுவாக்கில் கதைகளை அமைத்திருக்கிறார் நூலாசிரியர் இரா. சின்னதுரை. நன்றி: தினத்தந்தி, 9/7/2014.