சுந்தரகாண்டம் (படக்கதை)

சுந்தரகாண்டம் (படக்கதை), டாக்டர் வே. ஹரிகுமார் பதிப்பகம், தாரணி பதிப்பகம், விலை 20ரூ. ராமாயணத்தின் இறுதிப் பகுதி சுந்தர காண்டம். ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை ராமன் மீட்பதுதான் சுந்தரகாண்டம். இதைப் படக்கதையாக்கி இருக்கிறார் டாக்டர் வே.ஹரிகுமார். ஓவியங்களை அழகாகத் தீட்டியிருக்கிறார் தமிழ். பாராட்டத்தக்க முயற்சி. நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

ஒரு சிறு தூறல்

ஒரு சிறு தூறல், வளவ. துரையன், தாரணி பதிப்பகம், சென்னை, பக். 72, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-241-8.html இந்த உலகம் உயிரோட்டமாக இருப்பதற்கும் புதுப்பொலிவோடு சிறப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. அது காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்வதுதான். இதில் கவிதை விதிவிலக்கல்ல. காலத்திற்கேற்ப கவிதை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு கவிஞனின் வாழ்நாளிலேயே கவிதையின் போக்கு வெகுவாக மாறிப் போய்விடுகிறது. புளித்துப்போன சொற்களாலும், சலித்துப்போன உவமைகளாலும், அலுத்துப்போன உத்திகளாலும் இனி கவிதை எழுதினால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். […]

Read more

முப்பெரும் புராணங்கள்

முப்பெரும் புராணங்கள், பரத்வாஜர், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 296, விலை 175ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-060-1.html சிவபுராணம், விநாயகர் புராணம், கந்தர் புராணம் ஆகிய மூன்று பெரும் கடவுளர்களின் புராணங்களை ஒரே நூலாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். இதில் முதல் பகுதியாக வரும் சிவபுராணமானது, சிவ மகா புராணம், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள புராணச் சம்பவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. இரண்டாவது பகுதியான விநாயர் புராணத்தில் புராணக் கதைகளைவிட விநாயகர் வழிபாடு குறித்த விளக்கங்களே மிகுதியாக உள்ளன. […]

Read more

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்

வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள், கிருபாகர், சேனானி, காலச்சுவடு பதிப்பகம், பக். 215, விலை 175ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-195-7.html கடந்த 1997ல், பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர், சேனானி இருவரும், வீரப்பனால் கடத்தப்பட்டனர். மொத்தம் 14 நாட்கள் அவர்களை தனது பிடியில் வீரப்பன் வைத்திருந்தான். அப்போது நடந்த சம்பவங்கள், சுவையான விறுவிறுப்பான மொழிநடையில் தொகுக்கப்பட்டுள்ளன. வெள்ளைக்காரர்களை கடத்த வீரப்பன் திட்டமிட்டது, அதை கிருபாகரும் சேனானியும் கெடுத்தது, வீரப்பனின் உடன் இருந்த மாதேஷ், அன்புராஜ், சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்டோர், […]

Read more

இது நிகழாதிருந்திருக்கலாம்

இது நிகழாதிருந்திருக்கலாம், ஜி.ஜே. தமிழ்ச்செல்வி, தாரணி பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 80ரூ. ஒரு கவிதைப் பிரசவிப்பில் காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் பார்க்க முடியாது. இரண்டும் ஒன்றாகக் கலந்த ஒரு உயிர்ப்பு. முதல் காதலாகட்டும், முதல் முத்தமாகட்டும், முதல் ஸ்பரிசமாகட்டும் காமத்திற்கான முகவுரையாகவே உணரப்படுகின்றன. எந்த ஒரு முதல் காதலும் உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகவே நகர்கின்றன. தமிழ்ச்செல்வியின் ஒவ்வொரு கவிதைகளிலும் அவர் விட்டுச் செல்லும் காதலின் அடையாளம் நம்மை புது உலகிற்குள் பயணப்பட வைக்கின்றன. ஒரு பெண்ணின் காதல் வலிகளாகவே கவிதைகள் அனைத்தும் […]

Read more

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், ஃபிரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில், பக். 227, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html ஈழ இனப்படுகொலை என்பதே சாட்சியமற்ற போராகத்தான் ஆகிவிட்டது. ஆனால் அவற்றை எவ்வளவுக்கு எவ்வளவு மறைக்க முயன்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு கொலைக்கான ஆவணங்களும் சாட்சியங்களும், வாக்குமூலங்களும், உலகம் முழுக்க பரவலாகக் கிடைக்கும் விடயமாகிவிட்டது. அவற்றை முதல் முறையாக வெளியே கொண்டு வரும் நூலாக இந்நூல் விளங்குகிறது. இலங்கை பிபிசி செய்தியாளராக […]

Read more