திராவிடமா? தீராவிடமா?

திராவிடமா? தீராவிடமா?, இரண்டாம் பாகம், ஓவியப்பாவலர் மு.வலவன், ஊர்ச்செய்தி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. திராவிடமா? தீராவிடமா? என்ற நாலின் ஆசிரியர், சில ஆண்டுகள் திராவிடக் கட்சியில் இருந்தமையால் அக்கட்சியின் நெளிவு சுளிவுகளை நயம்பட எழுதியுள்ளார். முதல் கட்டுரை, ஈ.வெ.ரா.,வின் தனித்துவ போக்கினால் இயக்கத்தை விட்டு வெளியேறிய லட்சியத் தீபங்கள் எனத் துவங்கி, கடைசி கட்டுரையாக அருட்செல்வரின் எழுத்துக்கள் என, 15 கட்டுரைகளும், ஆறு பிற்சேர்க்கைகளும் உள்ளன. 49 நுால்களின் துணை கொண்டு, கருத்துக் களஞ்சியமாக, ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. தீண்டாமையை எதிர்த்த பிராமணத் […]

Read more

இது நிகழாதிருந்திருக்கலாம்

இது நிகழாதிருந்திருக்கலாம், ஜி.ஜே. தமிழ்ச்செல்வி, தாரணி பதிப்பகம், சென்னை, பக். 88, விலை 80ரூ. ஒரு கவிதைப் பிரசவிப்பில் காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் பார்க்க முடியாது. இரண்டும் ஒன்றாகக் கலந்த ஒரு உயிர்ப்பு. முதல் காதலாகட்டும், முதல் முத்தமாகட்டும், முதல் ஸ்பரிசமாகட்டும் காமத்திற்கான முகவுரையாகவே உணரப்படுகின்றன. எந்த ஒரு முதல் காதலும் உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகவே நகர்கின்றன. தமிழ்ச்செல்வியின் ஒவ்வொரு கவிதைகளிலும் அவர் விட்டுச் செல்லும் காதலின் அடையாளம் நம்மை புது உலகிற்குள் பயணப்பட வைக்கின்றன. ஒரு பெண்ணின் காதல் வலிகளாகவே கவிதைகள் அனைத்தும் […]

Read more