ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்

ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், ஃபிரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில், பக். 227, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html

ஈழ இனப்படுகொலை என்பதே சாட்சியமற்ற போராகத்தான் ஆகிவிட்டது. ஆனால் அவற்றை எவ்வளவுக்கு எவ்வளவு மறைக்க முயன்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு கொலைக்கான ஆவணங்களும் சாட்சியங்களும், வாக்குமூலங்களும், உலகம் முழுக்க பரவலாகக் கிடைக்கும் விடயமாகிவிட்டது. அவற்றை முதல் முறையாக வெளியே கொண்டு வரும் நூலாக இந்நூல் விளங்குகிறது. இலங்கை பிபிசி செய்தியாளராக இருந்த ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் இனப்படுகொலையின் கொடூரமான காட்சிகளையும், தகவல்களையும் உயிர் தப்பித்தோரின் அவல அனுபவங்களையும், சான்றாதாரமாகத் தந்து எல்லாவற்றையும் சாட்சியமாக்கியிருக்கிறார்.  

—-

 

வைரமணிக் கதைகள், வையவன், தாரணி பதிப்பகம், 4 ஏ, ரம்பயா பிளாட்ஸ், 32/79,  காந்தி நகர், 4வது பிரதான சாலை, அடையாறு, சென்னை 20, பக். 418, விலை 450ரூ.

தமிழ்ச் சிறுகதைகள் சமூகத்தின் இன்னொரு பிம்பமாக விளங்குபவை. நாளுக்கு நாள் அவற்றின் வீச்சு ஆரோக்கியமானதாக உருப்பெற்று வருகிறது. அந்த வகையில் வையவனின் இந்தச் சிறுகதைத் தொகுப்பையும் சேர்க்கலாம். அன்றாடம் நாம் சந்திக்கும் சிக்கல்கள், மனிதர்கள், நிகழ்வுகள் இவைகள்தான் இந்த வைரமணிக் கதைகளில் சதையும் ரத்தமுமாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. காதல், வீரம், தேசபக்தி, பெண்ணியம், தலித்தியம், கிராமியம் என்று ஒட்டுமொத்த மனித உணர்வுகளின் அடிவேராக இக்கதைகள் விளங்குகின்றன. -இரா. மணிகண்டன்- நன்றி; குமுதம், 4/9/2013.

Leave a Reply

Your email address will not be published.