வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்
வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள், கிருபாகர், சேனானி, காலச்சுவடு பதிப்பகம், பக். 215, விலை 175ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-195-7.html கடந்த 1997ல், பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர், சேனானி இருவரும், வீரப்பனால் கடத்தப்பட்டனர். மொத்தம் 14 நாட்கள் அவர்களை தனது பிடியில் வீரப்பன் வைத்திருந்தான். அப்போது நடந்த சம்பவங்கள், சுவையான விறுவிறுப்பான மொழிநடையில் தொகுக்கப்பட்டுள்ளன. வெள்ளைக்காரர்களை கடத்த வீரப்பன் திட்டமிட்டது, அதை கிருபாகரும் சேனானியும் கெடுத்தது, வீரப்பனின் உடன் இருந்த மாதேஷ், அன்புராஜ், சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்டோர், கானுயிர்கள் பற்றி அதிகளவு தெரிந்து வைத்திருந்தது. அவ்வப்போது விடுதலை செய்வதாக சொன்ன வீரப்பன், பின் மனம் மாறியது. ஜோதிபாசுவை யாருய்ய அந்த ஜத்தி பஸ்? என்று வீரப்பன் கேட்டது என சுவாரஸ்யமான, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சம்பவங்கள், புத்தகத்தில் நிறைந்திருக்கின்றன. தான் ஏன் துப்பாக்கி பிடிக்க நேர்ந்தது என்பதை, வீரப்பன் உணர்ச்சிகரமாக விவரிப்பது, தான் சேகரித்திருந்த புகைப்படங்களை நூலாசிரியர்களுக்கு காட்டி நெகிழ்ந்தது. யானைகளை தான் கொல்லவில்லை என சொல்வது, கடைசியாக, கர்நாடக முதல்வருக்கு வீரப்பன் விடுக்கும் வேண்டுகோள், பிடித்து வைத்திருந்தவர்களை விடுதலை செய்தபோது வீரப்பன் முதல் அவனது கூட்டாளிகள் வரை அனைவரும், கண் கலங்கியது ஆகிய பகுதிகள், கண்ணீல் நீரை வரவழைப்பவை. போலீசாராலும், பொதுமக்களாலும், பத்திரிகைகளாலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு காட்டு மனிதனின் கதையை, அருமையான தமிழில் தந்திருக்கிறார் பாவண்ணன். ‘ஊருக்கு திரும்பி விவசாயம் செஞ்சிகிட்டு, புத்தகங்கள் படிச்சிகிட்டு, வாழ்க்கையை நடத்தணும்ங்கறதுதான் என் ஆசை. அதற்கான என் முயற்சிகள் சாத்தியமில்லாம போயிடுச்சுன்னா… பாக்கியிருக்கிற காலத்தை இப்படி… காட்டுலயே அலஞ்சி அலஞ்சி கழிச்சிடுறேன்…’ -வீரப்பன் (பக். 184). நன்றி: தினமலர், 22/6/2014.
—-
சீதாயணம், தாரணி பதிப்பகம், சென்னை, விலை 75ரூ.
ராவணனிடம் சிறைப்பட்டுக் கிடந்த சீதையை, ராமன் மீட்டு வந்தபின் அவள் கற்புக்கரசி என்று ஊராருக்கு எடுத்துக் காட்ட தீக்குளிக்கச் செய்கிறான். அதன் பிறகு, சீதையை ராமன் ஏற்றுக்கொண்டதை குடிமக்களில் ஒருவன் கேவலமாகப் பேச, சீதையை மீண்டும் வனத்தில் கொண்டுபோய் விடச் செய்கிறான் ராமன். இதன்பின் சீதைக்கு லவன், குசன் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறக்க, அவர்கள் சிறுவயதிலேயே மாவீரர்களாகத் திகழ்கிறார்கள். காட்டில் சீதையையும், 2 மகன்களையும் ராமர் சந்தித்தபோதிலும் சீதை மீண்டும் அயோத்திக்குச் செல்லவில்லை. பூமாதேவியுடன் கலந்து விடுகிறாள். இதைப் படக்கதையாக எழுதியுள்ள சி. ஜெயபாரதன், கதையும், தமிழ் வரைந்த ஓவியங்களும் நன்றாக உள்ளன. ஆயினும் அச்சு இன்னும் சிறப்பாக இருந்தால், படங்கள் பளிச் என்று இருந்திருக்கும். நன்றி: தினத்தந்தி, 25/6/2014.