ஒளிந்திருப்பது ஒன்றல்ல
ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, தமிழில சுதாங்கன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 254, விலை 150ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-337-1.html இன்றைய உலகின் மனிதனின் தலையாய்ப் பிரச்னையான மனஅழுத்தத்துக்குத் தீர்வு காண்பது எப்படி என்பதற்கு எளியமுறை தியானங்கள் மூலம் விளக்கமளிக்கிறது இந்த நூல். உங்களை நீங்களே மன ரீதியாக சோதித்துக் கொள்ளுங்கள், இதில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அல்லது உங்களுக்கு எது எளிதானதோ அதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதுவே உங்கள் பிரச்னைக்குத் தீர்வு. இதற்காக உடலை வருத்திக்கொண்டு, கடுமையான தியானங்களைக் கடைப்பிடிக்கும் வழிமுறைகளைப் புறந்தள்ளிவிடுங்கள் என்கிறார் ஓஷோ. விருப்பத்துடன் எதையும் முயன்று பாருங்கள், துவக்கத்தில் சற்று கடினமாக இருந்தாலும் இறுதியில் மனநிறைவுக்கு உத்தரவாதம் என்று கூறுவதோடு அதற்காக பல்வேறு உதாரணங்களையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை. நாம் உயிர் வாழ்வதற்காக அயராது பாடுபடும் இந்த உடலுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் என்ற கேள்விக்கு ஓஷோவின் 200க்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதப்பட்டுள்ள வரிகள் பதிலாக அமையும் என்பதில் ஐயமில்லை. உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவோருக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம். நன்றி: தினமணி, 21/12/2014.